For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியா தோத்தாலும்.. நெஞ்சை நிமிர்த்து.. ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை அணியில் பூனம்

மெல்போர்ன்: இந்தியா மகளிர் டி 20 உலகக் கோப்பையை வெல்லத் தவறினாலும் கூட ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை அணியில் இந்தியாவின் பூனம் யாதவுக்கு இடம் கிடைத்துள்ளது. அவருக்கு மட்டும்தான் இடம் கிடைத்துள்ளது என்பது சோகம்தான்.

Recommended Video

இந்திய மகளிர் அணிக்கு கோலி அட்வைஸ்!

இந்திய மகளிர் அணியின் லெக் ஸ்பின்னரான பூனம் யாதவ் ஐசிசி வெளியிட்ட மகளிர் டி20 உலக்க கோப்பை அணியில் இடம் பிடித்துள்ளார். இந்தியாவின் டீன் ஏஜ் புயல் ஷெபாலி வர்மா 12வது வீரராக இடம் பிடித்துள்ளார். பெரும்பாலான இடங்களை ஆஸ்திரேலிய வீராங்கனைகள்தான் ஆக்கிரமித்துள்ளனர்.

இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தது நினைவிருக்கலாம். இது ஆஸ்திரேலியாவுக்கு 5வது பட்டமாகும். ஆனால் இந்தியா முதல் பட்ட வாய்ப்பை பரிதாபமாக தவற விட்டு விட்டது.

ஆஸி.யின் 5 வீராங்கனைகள்

ஆஸி.யின் 5 வீராங்கனைகள்

மகளிர் டி20 உலகக் கோப்பை அணியை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில் ஆஸ்திரேலியாவின் அலிஸா ஹீலி, பெத் மூனி, மெக் லேனிங், லெஸ் ஜோனசன், மேகன் ஷூட் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இவர்கள் தவிர இங்கிலாந்து வீராங்கனைகள் நான்கு பேருக்கு இடம் கிடைத்துள்ளது. இறுதிப் போட்டியில் இந்தியாவின் பவுலிங்கை காலி செய்தவர்கள் அலிஸாவும், பெத் மூனியும் என்பது நினைவிருக்கலாம்.

முதல் போட்டியில் 4 விக்கெட்டுகள்

முதல் போட்டியில் 4 விக்கெட்டுகள்

சர்வதேச வீரர்கள், வீராங்கனைகளான இயான் பிஷப், அஞ்சும் சோப்ரா, லிசா ஸ்தேலகர், பத்திரிகையாளர் ராப் நிக்கல்சன், ஐசிசி பிரதிநிதி ஹோலி கால்வின் ஆகியோர் இணைந்து இந்த அணியைத் தேர்வு செய்தனர். இந்தியாவின் பூனம் யாதவ் தொடக்கப் போட்டியில் ஆஸ்திரேலியாவை மிரளச் செய்தார். 4 விக்கெட்களைச் சாய்த்திருந்தார்.

2 முறை பிளேயர் ஆப் தி மேட்ச் விருது

2 முறை பிளேயர் ஆப் தி மேட்ச் விருது

மறுபக்கம் ஷெபாலி வர்மா 2 முறை பிளேயர் ஆப் தி மேட்ச் விருதை வென்றார். அதிரடியாக சிக்ஸர்களை விளாசி அரை சதங்களைக் குவித்தார். மொத்தமாக 163 ரன்களை இந்த தொடரில் அவர் பெற்றார். அவருக்கு வயது வெறும் 16 தான் என்பது முக்கியமானது. அவரது ஸ்டிரைக்கிங் ரேட் 158.25 ஆகும்.

ஐசிசி வெளியீடு

ஐசிசி வெளியீடு

இதுதான் ஐசிசி வெளியிட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை அணியாகும்: அலிஸா ஹீலி, பெத் மூனி, நாட் சிவர், ஹீதர் நைட், மெக் லேனிங், லாரா உல்வர்ட், ஜெஸ் ஜோனசன், சோபி எக்கல்ஸ்டன், அனியா ஷ்ரப்சோல், மேகன் ஷூட், பூனம் யாதவ். 12வது வீராங்கனை: ஷெபாலி வர்மா. விடுங்க சிங்கப் பெண்களே.. அடுத்த உலகக் கோப்பையில் நீங்கள்தான் தங்கப் பெண்களாக ஜொலிப்பீர்கள்..!

Story first published: Monday, March 9, 2020, 19:30 [IST]
Other articles published on Mar 9, 2020
English summary
Poonam Yadav Placed in ICC Team of Women's T20 World Cup 2020
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X