Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2 கேட்ச்களை கோட்டைவிட்ட தீபக் சாஹர்.. இறுதி போட்டியில் சிஎஸ்கே மோசமான ஃபீல்டிங்..ரசிகர்கள் ஆத்திரம்

அகமதாபாத் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் சிஎஸ்கே வீரர்கள் மோசமான ஃபீல்டிங்கில் ஈடுபடுவது, ரசிகர்களை ஆத்திரம் அடைய செய்துள்ளது. குஜராத் அணி போன்ற பலமான பேட்டிங் வரிசை உடைய அணியை எதிர்கொள்ளும் போது ஃபீல்டிங்கில் நீங்கள் கண்ணாக இருக்க வேண்டும்.

அதுவும் சுப்மன் கில் போன்ற வீரர்களுக்கு நீங்கள் ஒரு லைப் கொடுத்தால், அவர் வெற்றியை உங்களிடமருந்து கவர்ந்து சென்றுவிடுவார். ஆட்டத்தின் பவர்பிளே ஓவரில் தேஷ்பாண்டே வீசிய ஓவரில் சுப்மன் கில் அழகாக ஒரு கேட்ச் கொடுத்தார்.

Poor Fielding from CSK Players and deepak chahar missed 2 catches

அதுவும், கில் 3 ரன்களில் இருந்த போது, அதனை தீபக் சாஹர் கோட்டை விட்டார். இதே போன்று அடுத்த ஓவரில், தீபக் சாஹர், தாம் வீசிய பந்தில் சாஹா அடுத்த பந்தை பிடிக்காமல் தவறவிட்டார். முதல் வாய்ப்பை போல் இது எளிதாக இல்லை என்றாலும், முதலில் விட்ட கேட்ச்க்கு இதை பிடித்திருந்தால், பரிகாரமாக இருந்திருக்கும்.

இதே போன்று, ரன் அவுட் செய்யும் வாய்ப்பையும் சிஎஸ்கே வீரர்கள் தவறவிட்டனர். ஜடேஜா ஓவரில் கில் டபுள்ஸ் ஓடினார். அப்போது Non striker நோக்கி கில் ஓடி வர, பந்தை சரியாக பிடிக்காமல் ஸ்டம்பில் ஜடேஜா அடித்து விட்டார். இதனால் அந்த வாய்ப்பும் போய்விட்டது. ஃபீல்டிங்கில் சிஎஸ்கே வீரர்கள் கொஞ்சம் சிறப்பாக செயல்பட்டு இருந்தால், அதுவே குஜராத்துக்கு நெருக்கடி ஏற்பட்டு இருக்கும்.

Story first published: Monday, May 29, 2023, 20:28 [IST]
Other articles published on May 29, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+