Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

லாக்-டவுன் தளர்த்தப்பட்டாலும் வீரர்கள் கிரிக்கெட் விளையாட 3 வாரம் தேவைப்படும்

டெல்லி : நாடெங்கிலும் அமலில் உள்ள லாக்-டவுன் தளர்த்தப்பட்டு, தங்களின் அன்றாட பயிற்சிகளுக்கு கிரிக்கெட் வீரர்கள் திரும்பினாலும், போட்டிகளில் விளையாட அவர்களுக்கு 3 வாரங்கள் தேவைப்படும் என்று பயிற்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Recommended Video

Post lockdown, players need 3 weeks to get into match

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடெங்கிலும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதையடுத்து வீரர்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். இதனால் அவர்களது பயிற்சிகள் குறைந்துள்ளதாகவும் பிட்னெஸ் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளார்.

அவர்கள் தினமும் ட்ரெட்மில்லில் வொர்க் அவுட் செய்து வந்தாலும், மைதானத்தில் 6 ரவுண்டுகள் ஓடும் பயிற்சி மூலம் கிடைக்கும் பிட்னெஸ் அவர்களுக்கு கிடைக்காது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வீட்டிற்குள் முடங்கிய வீரர்கள்

வீட்டிற்குள் முடங்கிய வீரர்கள்

சர்வதேச அளவில் லட்சத்திற்கும் மேற்பட்டோர்களை காவு வாங்கியுள்ளது கொரோனா வைரஸ். இந்தியாவிலும் கொரோனா வைரஸ் காரணமாக நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, தற்போது மேலும் மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பலதுறையினரும் குறிப்பாக விளையாட்டு வீரர்கள் வெளிவர முடியாமல் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர்.

3 வாரங்கள் பிடிக்கும்

3 வாரங்கள் பிடிக்கும்

இதனிடையே ஊரடங்கு தளர்த்தப்பட்டு, வழக்கமான பயிற்சிக்கு கிரிக்கெட் வீரர்கள் திரும்பினாலும் அவர்கள் போட்டிகளில் பங்கேற்ற மூன்று வாரங்கள் பிடிக்கும் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ராம்ஜி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். வீரர்கள் வீட்டிற்குள் இருந்துக்கொண்டே செய்யக்கூடிய பயிற்சிகள் குறித்து அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டாலும், ட்ரெட்மில்லில் ஓடுவதற்கும் மைதானத்தில் ஓடுவதற்கும் வித்தியாசம் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பயிற்சிகள் குறித்து விளக்கம்

பயிற்சிகள் குறித்து விளக்கம்

கடந்த 2011 உலக கோப்பையை வெற்றிபெற்ற இந்திய அணியின் பயிற்சியாளர் ராம்ஜி, மைதானத்தில் மேற்கொள்ளும் பயிற்சி மிகவும் முக்கியமானது என்றும் ட்ரெட்மில்லில் மேற்கொள்ளும் பயிற்சி, கூடுதல் பயிற்சியாக மட்டுமே எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அது முக்கிய பயிற்சியில் வராது என்றும் கூறியுள்ளார்.

பயிற்சியாளர் சுதர்சன் திட்டவட்டம்

பயிற்சியாளர் சுதர்சன் திட்டவட்டம்

இந்நிலையில், வீடுகளில் முடங்கியுள்ள வீரர்கள் போட்டிகளில் பங்கேற்க குறைந்தபட்சம் 21 நாட்கள் தேவைப்படும் என்று கடந்த 2013 முதல் 2016 வரை இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த பயிற்சியாளர் சுதர்சன் தெரிவித்துள்ளார். ஜம்பிங் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளாவிட்டால், வீரர்கள் காயங்களை சந்திக்கும் சூழல் ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

செயல்பாட்டை குறைக்கும்

செயல்பாட்டை குறைக்கும்

கொரோனாவால் வீரர்களுக்கு கிடைத்துள்ள இந்த முடக்கத்தை அவர்களுக்கான ஓய்வாக எடுத்துக் கொள்ள முடியாது என்று சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் எல் பாலாஜி தெரிவித்துள்ளார். ஓடிக்கொண்டே இருக்கும் கார், ஓரிடத்தில் நிறுத்தப்பட்டால் அதன் பேட்டரி சேதமடையும். அதேபோல தான் வீரர்களின் முடக்கம் அவர்களது செயல்பாட்டை குறைக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

Story first published: Friday, April 17, 2020, 12:17 [IST]
Other articles published on Apr 17, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+