Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலக கோப்பையை ஒத்திவைக்கிற சூழல் வந்தா அத செஞ்சிதான் ஆகணும் -ஜேசன் ராய்

லண்டன் : கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் ஒத்தி அல்லது ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், கிரிக்கெட் விளையாடாமல் காத்திருக்க முடியவில்லை என்று இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் தெரிவித்துள்ளார்.

Recommended Video

டி20 உலக கோப்பையை ஒத்திவைக்கிற சூழல் வந்தா அத செஞ்சிதான் ஆகணும்

டி20 உலக கோப்பை தொடரை ஒத்திவைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் அதை செய்துதான் ஆகவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இன்னும் சில தினங்களில் விளையாட்டு போட்டிகளை துவங்கவேண்டும் என்று நிர்வாகிகள் கூறும்பொழுது விளையாடுவதற்கு வீரர்கள் தயாராக இருக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குழந்தையாக மாறிய ஜேசன் ராய்

குழந்தையாக மாறிய ஜேசன் ராய்

கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து போட்டிகளும் குறிப்பாக கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், நிலைமை எப்பொழுது சரியாகும் என்ற எதிர்பார்ப்பு மற்றும் ஏக்கத்துடன் கிரிக்கெட் வீரர்கள் தங்களது வீடுகளில் காத்திருக்கின்றனர். இதற்கு இங்கிலாந்து வீரர் ஜேசன் ராயும் விதிவிலக்கில்லை. சில கிரிக்கெட் போட்டிகளிலாவது விளையாட மாட்டோமா என்று அவர் குழந்தைதனமாக ஏக்கம் தெரிவித்துள்ளார்.

ஒத்திவைக்கும் சூழலில் செய்துதான் ஆகவேண்டும்

ஒத்திவைக்கும் சூழலில் செய்துதான் ஆகவேண்டும்

மேலும் ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் -நவம்பரில் திட்டமிடப்பட்டுள்ள டி20 உலக கோப்பை தொடரை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டால், அணிகள் தங்களை தயார் செய்துகொள்ள உரிய கால அவகாசம் கிடைக்காவிட்டால் அதை ஒத்திவைத்து தான் ஆகவேண்டும் என்றும் ஜேசன் ராய் கூறியுள்ளார்.

ஜேசன் ராய் அறிவுறுத்தல்

ஜேசன் ராய் அறிவுறுத்தல்

ஆனால் டி20 உலக கோப்பை தொடர் நடத்தப்பட்டால் அதை எதிர்கொள்வதற்கு வீரர்கள் தயாராக இருக்கவேண்டும் என்றும் ஜேசன் ராய் தெரிவித்துள்ளார். 3 வாரங்கள் இடைவெளி கொடுக்கப்பட்டு விளையாட அழைத்தாலும் விளையாட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இதேபோல மற்ற தொடர்களும் துவங்கப்பட்டால் அதற்கும் வீரர்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் விளையாடனும் பாஸ்

கிரிக்கெட் விளையாடனும் பாஸ்

சூழ்நிலைக்கு தகுந்தபடி ரசிகர்கள் அற்ற காலி மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டாலும் விளையாட தயாராக இருப்பதாகவும் ஜேசன் தெரிவித்துள்ளார். தான் இசிபி மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளதாகவும், போட்டிகளை நடத்துவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் நிர்வாகிகள் பரிசீலித்து வருவதாகவும் ஜேசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Story first published: Monday, May 4, 2020, 15:18 [IST]
Other articles published on May 4, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+