Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மகனுக்காக பிரியாணி சமைத்து விற்று சம்பாதிக்கும் பிரணவின் தாயார்!

மும்பை: மும்பையைச் சேர்ந்த 15 வயது பிரணவ் தனவாடே இன்று உலகப் புகழ் பெற்ற சாதனையாளர். இந்த சாதனையை அவர் 2 நாட்களில் நிகழ்த்தி விட்டாலும் கூட அதற்காக அவர் பட்ட கஷ்டங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. மேலும் பிரணவுக்காக அவரது பெற்றோர்கள் காட்டும் அக்கறையும், உழைப்பும். நம்மை பிரமிக்க வைக்கிறது.

15 வயதில் ஆட்டமிழக்காமல் 1009 ரன்களைக் குவித்து உலக கிரிக்கெட் ஜாம்பவான்கள், ரசிகர்களின் அன்பைப் பெற்று விட்டார் பிரணவ். எப்படிடா தம்பி இப்படி ஆடுனே என்று கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதி்லளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார் பிரணவ்.

இந்த நிலையில் பிரணவ் குறித்த சில சுவாரஸ்யத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை பிரணவின் பயிற்சியாளரும், குருவுமான மொபீன் ஷேக் பகிர்ந்துள்ளார்.

சீரியஸே கிடையாது

சீரியஸே கிடையாது

மொபீன் கூறுகையில், ஆரம்பத்தில் பிரணவிடம் சீரியஸ்னஸ் கிடையாது. ஜாலியாக வருவான், ஜாலியாக விளையாடுவான். பெரிய சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணமே இருந்ததில்லை.

குடு குடுத்தேன்

குடு குடுத்தேன்

இதனால் கிரிக்கெட் அகாடமியில் அவன் மீது அதிருப்தி வந்தது. என்னிடம் முறையிட்டனர். இதையடுத்து நான் அவனை அழைத்து இப்படியே விளையாடினால் அகாடமியை விட்டு விலக்கி விடுவார்கள். உன்னை மாற்றிக் கொள்ளாவிட்டால் கஷ்டம் என்று கண்டித்தேன். அது அவனிடம் மாற்றத்தை ஏற்படுத்தியது.

ஒரே மாதத்தில் மாற்றம்

ஒரே மாதத்தில் மாற்றம்

நான் ஒரு மாதத்திற்கு முன்புதான் பிரணவைக் கண்டித்தேன். அதன் பிறகு அவன் முற்றிலுமாக மாறி விட்டான். அவனைப் போல டெடிகேட்டட் பையனை பார்க்கவே முடியாது என்று கூறும் அளவுக்கு மாறி ஆச்சரியப்படுத்தினான்.

5 வயதில் பயிற்சிக்கு வந்த பையன்

5 வயதில் பயிற்சிக்கு வந்த பையன்

பிரணவ் தனது 5வது வயதில் என்னிடம் பயிற்சிக்காக வந்தான். பிரணவ் மாதிரியே மேலும் சில பசங்களும் சரியாக பயிற்சி செய்ய மாட்டார்கள். விளையாட்டுத்தனமாக இருப்பார்கள். ஜோக் அடித்தபடியும், மற்றவர்களைக் கிண்டல் செய்தபடியும் இருப்பார்கள்.

தான் அவுட்டானதையே கொண்டாடிய பிரணவ்

தான் அவுட்டானதையே கொண்டாடிய பிரணவ்

ஒருமுறை அகில இந்திய அளவிலான போட்டி ஒன்றில் தான் அவுட்டானதையே ஜாலியாக சிரித்தபடி எடுத்துக் கொண்டான் பிரணவ். எனக்கு வந்தது பாருங்கள் கோவம்.. பிடித்து வாங்க விட்டேன் அவனை.

அற்புதமாக மாறினான்

அற்புதமாக மாறினான்

அதன் பிறகுதான் அவனை அழைத்து எச்சரித்தேன். பிறகு அவனிடம் பல மாற்றங்கள் அதிரடியாக வந்து சேர்ந்தன. இன்று சாதனையாளராக மாறி நிற்கிறான் பிரணவ்.

சாதனையை எதிர்பார்த்தேன்

சாதனையை எதிர்பார்த்தேன்

எனக்கு பிரணவ் 1000 ரன்களை எடுத்தது ஆச்சரியம் தரவில்லை. காரணம், எனக்கு அவனது திறமை தெரியும். நிச்சயம் அவன் சாதிப்பான் என்ற நம்பிக்கையில் இருந்து வந்தேன். இப்போது அதை அவன் செய்துள்ளான்.

விளையாட்டுத்தனம் போனது முதலே

விளையாட்டுத்தனம் போனது முதலே

அவனிடம் இருந்த ஒரே கெட்ட பழக்கம் அந்த துடுக்குத்தனம்தான். அது போனதுமே அவன் தனது திறமைகளை வெளிக் கொணர ஆரம்பித்து விட்டான். அவனது அணுகுமுறையே மாறி விட்டது. இனி அவன் தொடர்ந்து சாதனை படைப்பான் என்றார் மொபீன்.

தாயாரின் உழைப்பு

தாயாரின் உழைப்பு

பிரணவின் தந்தை ஒரு ஆட்டோ டிரைவர். அவர் கடுமையாக பாடுபட்டு தனது மகனுக்குத் தேவையானதை வாங்கித் தருகிறார். அதேபோல பிரணவின் தாயாரும் தனது மகனுக்காக உழைக்கிறார். மொபீனின் மனைவியிடமிருந்து பிரியாணி செய்யக் கற்றுக் கொண்ட அவர், அதை வைத்து இப்போது ஆர்டர் பிடித்து அதில் வரும் காசை தனது மகனுக்காக செலவிடுகிறாராம்.

திரண்டு வந்த ஆட்டோக்காரர்கள்

திரண்டு வந்த ஆட்டோக்காரர்கள்

மும்பையில் நடந்த சாதனைப் போட்டியின்போது பிரணவின் ஆட்டத்தைக் கேள்விப்பட்டு ஆட்டோ டிரைவர்கள் மைதானத்திற்குள் படையெடுத்து வந்து விட்டனர். பிரணவின் தந்தையும் கூட சவாரிகளை விட்டு விட்டு மகனின் சாதனையை நேரில் பார்த்து ரசித்தார்.

2 பேட்

2 பேட்

இந்தப் போட்டயின்போது பிரணவ் மொத்தம் இரண்டு பேட்களைப் பயன்டுத்தி மொத்த சாதனை ரன்களையும் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நான்கு முறை அவுட்டாகப் பார்த்து தப்பினார்.

தூக்குடா

தூக்குடா

போட்டி முடிந்ததும் பிரணவை தோளில் தூக்கிக் கொண்டு அத்தனை பேரும் கொண்டாடினார்கள். ஆட்டத்தைப் பார்க்க வந்தவர்கள் பரிசுகளை கொடுத்து பிரணவை சந்தோஷத்தில் மூழ்கடித்து விட்டனர்.

"கடவுள்" வாழ்த்து!

பிரணவின் சாதனைக்கு கிரிக்கெட் ரசிகர்களால் கடவுள் என போற்றப்படும் சச்சின் வாழ்த்து தெரிவித்திருந்தார். கங்கிராட்ஸ் பிரணவ். கடின உழைப்பு வென்றுள்ளது. புதிய உயரங்களை அளக்கப் போகிறாய் வாழ்த்துகள் என்று கூறியுள்ளார் சச்சின்.

அப்பறம் என்னடா தம்பி.. கடவுளே வாழ்த்திட்டாரு.. விரைவில் இன்னொரு கடவுளாக உருவெடுக்க வாழ்த்துகிறோம்!

Story first published: Thursday, January 7, 2016, 16:29 [IST]
Other articles published on Jan 7, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+