For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பிரசன்னா பதவியும் போச்சு!

By Staff

பெங்களூர்:இந்திய கிரிக்கெட் லீகின் நிர்வாகிகளில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் எரப்பள்ளி பிரசன்னாவின் சுழற்பந்து பயிற்சியாளர் பதவியை, கர்நாடக கிரிக்கெட் சங்கம் பறித்துள்ளது.

Prasanna

கபில்தேவைத் தலைவராகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் லீகின் முதல் கட்ட வீரர் பட்டியல் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து தேசிய கிரிக்கெட் அகாடமி பதவியிலிருந்து கபில் தேவை நீக்கி இந்திய கிரிக்கெட் வாரியம் அதிரடி நடவடிக்கையை எடுத்தது.

இந் நிலையில், கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் சுழற் பந்து பயிற்சியாளராக இருந்து வந்த பிரசன்னாவின் பதவியை கர்நாடக கிரிக்கெட் சங்கம் இன்று பறித்தது.

இதுகுறித்த முடிவை கிரிக்கெட் சங்க செயலாளர் பிரிஜேஷ் படேல் பெங்களூரில் செய்தியாளர்களிடம் அறிவித்தார். அவர் கூறுகையில், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உத்தரவுப்படி பிரசன்னாவின் பதவி பறிக்கப்பட்டுள்ளது என்றார்.

பிரசன்னாவுக்கு கர்நாடக கிரிக்கெட் சங்கம் வழங்கும் ஓய்வூதியமும் நிறுத்தப்படுவதாக பிரிஜேஷ் படேல் தெரிவித்தார். இந்திய கிரிக்கெட் லீகில் செயற்குழு உறுப்பினராக பிரசன்னா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கபில் தேவ் எச்சரிக்கை:

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் லீகில் இடம் பெற்றதற்காக இளம் வீரர்களை இந்திய கிரிக்கெட் வாரியம் பழிவாங்க நினைத்தால், புறக்கணித்தால் வாரிய அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று கபில் தேவ் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், என்னைப் பதவியிலிருந்து நீக்கியுள்ளை நான் எதிர்பார்த்திருந்ேதன். ஆனால் நீக்குவதற்கு முன்பு என்னிடம் பேசியிருக்கலாம். ஆனால் அதை கெளரவக் குறைச்சலாக கிரிக்கெட் வாரியம் நினைத்து விட்டது ேபாலும்.

இது இன்று நேற்றல்ல கடந்த 70 வருடங்களாகவே இப்படித்தான் செயல்படுகிறது கிரிக்கெட் வாரியம்.

இந்திய கிரிக்கெட் லீகில் இணைந்துள்ள வீரர்களை இந்திய கிரிக்கெட் வாரியம் புறக்கணிக்கக் கூடாது, அவர்களுக்கும் அணியில் இடம் பெற வாய்ப்பளிக்க வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் நான் கிரிக்கெட் வாரியத்தைக் கண்டித்து உண்ணாவிரதம் இருப்பேன். வீரர்களுக்கு எப்போதும் ஆதரவாக இருப்பேன் என்று எச்சரித்துள்ளார் கபில்தேவ்.

பிசிசிஐக்கு வந்த ஞானோதயம்:

இதற்கிடையே ஐசிஎல்லின் நடவடிக்கைகயால் அரண்டு போன இந்திய கிரிக்கெட் வாரியம் உள்ளூர் போட்டிகளில் பங்கேறகும் வீரர்களுக்கான சம்பளத்தை பெருமளவு உயர்த்தியுள்ளது.

அதன்படி ரஞ்சி போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு போட்டி ஒன்றுக்கு ரூ. 35 ஆயிரம் (முன்பு வெறும் 16 ஆயிரம்தான்) என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ரஞ்சிக் கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ. 50 லட்சம் பரிசுத் தொகையாக அளிக்கப்படுமாம்.

முன்பு இது வெறும் ரூ. 7 லட்சமாக இருந்தது. அதேபோல துலிப் கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ. 30 லட்சம் பரிசளிக்கப்படும். முன்பு வெறும் 5 லட்சம் ரூபாயை மட்டுமே பரிசுத் தொகையாக கொடுத்து வந்தது இந்திய கிரிக்கெட் வாரியம்.

Story first published: Wednesday, December 7, 2011, 17:43 [IST]
Other articles published on Dec 7, 2011
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+