வாவ்…!! ஐபிஎல் தொடரில் கால் பதித்த 16 வயது குட்டி பையன் பிரயாஸ் ராய் பர்மன்.. !!
ஹைதராபாத்: ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியில் பிரயாஸ் ராய் பர்மன் என்னும் குட்டி பையன் அறிமுகமாகி உள்ளார். அவருக்கு வயது 16 வயது , 157 நாட்களாகும்.
ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் பெங்களூர் அணியின் மூலம் ஐபிஎல் தொடருக்கு பிரயாஸ் ராய் பர்மன் அறிமுகமாகி உள்ளார். மைதானத்திற்குள் கால் வைப்பதற்கு முன்பாகவே சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இன்றைய போட்டியின் மூலம் அறிமுகமாகும், பிரயாஸ் ராய் பர்மன் ஐபிஎல் டி.20 அரங்கிற்குள் மிக குறைந்த வயதில் கால் பதித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். 16 வயது 157 நாட்களுடன் இன்றைய போட்டியில் அறிமுகமாகி இருக்கிறார் பிரயாஸ் ராய்.
மிக குறைந்த வயதில் ஐபிஎல் தொடரில் இடம்பெற்ற வீரர்கள் பட்டியலில் அவர் இடம் பிடித்துள்ளார். 17வயதில் அறிமுகமான முஜிபுர் ரஹ்மானை பின்னுக்கு தள்ளி அவர் முதலிடம் பிடித்துள்ளார்.
மிக குறைந்த வயதில் ஐபிஎல் தொடரில் கால் பதித்த வீரர்கள் பட்டியல்:
பிரயாஸ் ராய் பர்மன் - 16 வயது , 157 நாட்கள்
முஜிபுர் ரஹ்மான் - 17 வயது, 11 நாட்கள்
சர்பராஸ் கான் - 17 வயது 177 நாட்கள்
பிரதீப் சங்வான் - 17 வயது 179 நாட்கள்
வாசிங்டன் சுந்தர் - 17 வயது - 199 நாட்கள்


Click it and Unblock the Notifications