Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெற்றிக்கு வாழ்த்துகள்.. தொடரை வெல்லுங்கள் கோலி.. குடியரசுத்தலைவர் டிவிட்!

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதற்கு, இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியா தற்போது இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே டி20 தொடரில் வென்ற இந்தியா, ஒருநாள் தொடரில் சொதப்பி தோல்வி அடைந்தது.

President Ram Nath Govind wishes India for the victory against England

மேலும் டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டியில் மோசமாக தோல்வி அடைந்தது. ஆனால் தற்போது இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபாரமாக வென்றுள்ளது.

இந்தியா இந்த போட்டியில் 203 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. இன்னும் தொடரில் இரண்டு போட்டிகள் மீதம் உள்ளது. இந்த நிலையில் இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், டிரெண்ட் பிரெட்ஜ் போட்டியில் இங்கிலாந்தை தோற்கடித்து வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள். இன்னும் இந்த தொடரில் இரண்டு போட்டிகள் மீதம் உள்ளது, இந்த தொடரை இப்போதும் வெல்ல முடியும் கோலி, என்று வாழ்த்தி உள்ளார்.

Story first published: Wednesday, August 22, 2018, 17:04 [IST]
Other articles published on Aug 22, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+