Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேகேஆர் அணியின் கேப்டனாக இயான் மார்கன் மாற்றப்படுவாரா? நெருக்கடியில் தினேஷ் கார்த்திக்

அபுதாபி : கேகேஆர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையில் இன்று அபுதாபியில் ஐபிஎல்லின் 5வது போட்டி நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டியில் கேப்டன்ஷிப்பிலும் மற்றும் தனிப்பட்ட வீரராகவும் கேகேஆர் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் தன்னை நிரூபித்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அணியில் உலக கோப்பை நாயகன் இயான் மார்கன் இடம்பெற்றுள்ள நிலையில், தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடாத நிலையில் கேப்டன் பொறுப்பு மாற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேகேஆர் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக்

கேகேஆர் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையில் அபுதாபியில் ஐபிஎல்லின் 5வது போட்டி இன்று மாலை நடைபெறவுள்ளது. தன்னுடைய முதல் போட்டியான இதில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

தினேஷ் கார்த்திக் மீதான நெருக்கடி

தினேஷ் கார்த்திக் மீதான நெருக்கடி

இளம் வீரர் தினேஷ் கார்த்திக்கின் தலைமையின் கீழ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இந்த ஐபிஎல் சீசனை சந்திக்க உள்ளது. இந்நிலையில் அணியில் இங்கிலாந்தின் உலக கோப்பை வெற்றி நாயகன் இயான் மார்கன், பாட் கமின்ஸ், ஆன்ட்ரே ரஸ்ஸல் ஆகிய அனுபவமிக்க வீரர்கள் இணைந்துள்ள நிலையில் இந்த தொடரின் அனைத்து போட்டிகளிலும் கேப்டனாகவும் தனிப்பட்ட வீரராகவும் தன்னை நிரூபிக்கும் கட்டாயம் தினேஷ் கார்த்திக்கிற்கு ஏற்பட்டுள்ளது.

சுனில் கவாஸ்கர் ஆலோசனை

சுனில் கவாஸ்கர் ஆலோசனை

இந்த தொடரின் முதல் 4 -5 போட்டிகளில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக செயல்படவில்லையென்றால் அவருக்கு மாற்றாக இயான் மார்கனை கேப்டனாக நியமிக்கலாம் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரும் இரு தினங்களுக்கு முன்பு தெரிவித்துள்ள நிலையில், தினேஷ் கார்த்திக் மீதான நெருக்கடி அதிகரித்துள்ளது.

பாகிஸ்தான், ஆஸி தொடரிலும் சிறப்பு

பாகிஸ்தான், ஆஸி தொடரிலும் சிறப்பு

கடந்த ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார் இயான் மார்கன். இதன்மூலம் உலக கோப்பையை தன்னுடைய அணிக்கு பரிசாக அளித்துள்ளார். மேலும் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரிலும் அவர் சிறப்பாக விளையாடி வெற்றிக்கு காரணமாக இருந்தார்.

Story first published: Wednesday, September 23, 2020, 22:07 [IST]
Other articles published on Sep 23, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+