Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவின் புதிய கோச்.. இலங்கைக்கு பறந்த "தித்திப்பான" அழைப்பு - விலகும் கோலியின் "சரிபாதி"?

மும்பை: இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார் என்ற கேள்விக்கு ஏறக்குறைய விடை கிடைத்துவிட்டது எனலாம். அப்படித் தான் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்திய கிரிக்கெட் அணியில் கோலி கேப்டனான பிறகு, அணியின் தலைமை பயிற்சியாளர் ஆனவர் ரவி சாஸ்திரி.

கும்ப்ளே பதவி விலகிய பிறகு தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ஏகப்பட்ட போட்டிகள் இருந்த நிலையில், சாவகாசமாக கோச் ஆனவர் சாஸ்திரி.

அப்படியொரு புரிதல்

அப்படியொரு புரிதல்

அதுவும், கும்ப்ளே சாதாரணமாக விடை பெறவில்லை. கேப்டன் கோலியோடு ஏகப்பட்ட பிரச்சனை அவருக்கு இருந்தது."ட்ரில் மாஸ்டர்" போல வீரர்களை நடத்துகிறார் என்று கும்ப்ளே மீது வெளிப்படையாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதனால் ரொம்பவே மனம் உடைந்த கும்ப்ளே, சற்று அதிருப்தியுடன் வெளியேறினார். அதன் பிறகு சேவாக் உள்ளிட்ட பல முக்கிய தலைகள் இந்திய கோச் பதவிக்கு மல்லுக்கட்டினாலும், ரவி சாஸ்திரியை பயிற்சியாளர் ஆக்கினார் விராட் கோலி. இருவருக்குள்ளும் அப்படியொரு புரிதல் இருந்தது. நட்பு இருந்தது. ஒருவரையொருவர் எப்போதும் விட்டுக் கொடுத்ததில்லை.

ராகுல் டிராவிட்

ராகுல் டிராவிட்

ஆனால், இருவரது தலைமையில் இந்திய அணியில் முக்கியமான எந்த ஐசிசி கோப்பையையும் வெல்லவில்லை. 2019 உலகக் கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் என இரு கோப்பைகளையும் ரவி சாஸ்திரி பயிற்சியில் இந்திய அணி இழந்திருக்கிறது. இந்நிலையில், அவருடைய பதவிக்காலம், வரும் அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை டி20 தொடரோடு நிறைவடைய உள்ளது. இந்த சூழலில், அவரது பதவிக் காலத்தை மேலும் நீட்டிக்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது. அவருக்கு பதில், தற்போது இந்திய 'ஏ' அணியின் பயிற்சியாளராக இலங்கை சென்றிருக்கும் ராகுல் டிராவிட்டை இந்திய அணியின் பயிற்சியாளராக பதவியேற்க பிசிசிஐ சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயித்துவிட்டால் மாறாது

ஜெயித்துவிட்டால் மாறாது

இந்த தகவல் முறைப்படி இலங்கையில் உள்ள ராகுல் டிராவிட்டுக்கு தெரியப்படுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து முன்னாள் இந்திய வீரர் ரீதிந்தர் சிங் சோதி கூறுகையில், "இது நிச்சயமாக ஊகமானது. ரவி சாஸ்திரி சிறப்பாக செயல்படவில்லை என்று சொல்வது தவறு. அவர் மிகச் சிறப்பாக பங்காற்றியுள்ளார். ஆனால் கோப்பைகளை வெல்வது தான் அளவுகோல் என்றால், நிச்சயம் அவர் அதைச் செய்யவில்லை எனலாம். எனினும், இந்திய அணி வரும் டி20 உலகக் கோப்பையை வென்றால், ரவி சாஸ்திரியை நீக்க முடியாது.

Recommended Video

Pakistan போட்ட Worldcup Plan! Sri Lanka - Bangladesh உடன் கூட்டணி | OneIndia Tamil
சாஸ்திரி மீது பிரஷர்

சாஸ்திரி மீது பிரஷர்

அதேசமயம், ராகுல் டிராவிட் இந்திய ஏ அணியின் பயிற்சியாளராக இலங்கை சென்றிருக்கிறார். மறுபக்கம், இங்கிலாந்து தொடருக்கு இரு கூடுதல் பேட்ஸ்மேன்களை கேட்ட ரவி சாஸ்திரியின் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது. இந்த நிராகரிப்பையே நாம் ஒரு சிக்னலாக எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் என்னிடம் கேட்டால், ரவி சாஸ்திரி மீது மிகுந்த பிரஷர் உள்ளது" என்பேன் என்று கூறியுள்ளார்.

Story first published: Monday, July 12, 2021, 20:36 [IST]
Other articles published on Jul 12, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+