உலக கோப்பையிலும் தொட்டுத்தொடரும் எங்கள் வெற்றி பயணம்.. கோஹ்லி பேட்டி
நாக்பூர்: எங்கள் திறமை மீது நம்பிக்கை வைத்து, ஆசிய கோப்பையில் பெற்ற வெற்றியை தொடர்ந்து முன்னெடுத்து செல்வோம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோஹ்லி தெரிவித்தார்.
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில், நாக்பூரில், நாளை நடைபெறும் சூப்பர் 10 சுற்றின் முதல் ஆட்டத்தில், இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. இதையொட்டி நிருபர்களிடம் விராட் கோஹ்லி இன்று கூறியதாவது:
இந்திய அணி கடைசியாக விளையாடிய 11 டி20 போட்டிகளில், 10ல் வெற்றி பெற்றுள்ளது. ஆசிய கோப்பையில் சிறப்பாக ஆடியது நல்ல பயிற்சியை தந்துள்ளது.

வெற்றி பாதை
இந்த உலக கோப்பைக்கு தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ள உள்ளோம். எங்கள் திறமை மீது நம்பிக்கை வைத்து, வெற்றி பாதையை தொடருவோம்.

விளையாட்டில் கவனம்
முடிந்த அளவுக்கு ஃபீல்டில் அமைதியாக இருந்து, விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்தி வெற்றிபெற முயற்சிப்போம்.

ஷமி ரிட்டர்ன்
வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அணிக்கு மீண்டும் திரும்பியது மகிழ்ச்சி. வார்ம்-அப் போட்டிகளில் சிறப்பாக பந்து வீசினார்.

மாற்றம் சிரமம்
அதேநேரம், தற்போதுள்ள இந்திய அணியில் மாற்றம் செய்வது என்பது மிகுந்த சிரமமான விஷயமாகும். இதில், கேப்டன்தான் முடிவெடுக்க வேண்டும்.

தன்னம்பிக்கை
பாண்ட்யா, பும்ரா போன்றோர் மிகுந்த தன்னம்பிக்கையோடு உள்ளனர். நான் கிரிக்கெட்டுக்குள் நுழைந்தபோது இவ்வளவு தைரியம் இருந்ததில்லை. இவ்வாறு கோஹ்லி தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications