Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதல்முறையா நெட் பிராக்டீஸ் செய்யறதுக்கு ரொம்ப பயமா இருந்துச்சு... விராட் கோலி

துபாய் : 5 மாதங்களுக்கு பிறகு முதல் முறையாக நெட் பயிற்சியில் ஈடுபட்டது பயத்தை கொடுத்ததாக ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

Recommended Video

பயிற்சியை தொடங்கிய IPL அணி வீரர்கள்

ஆனால் கொரோனா ஊரடங்கு நேரத்திலும் தான் தன்னுடைய பிட்னஸ் பயிற்சியை மேற்கொண்டதால் தான் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக நெட் பயிற்சிகளை மேற்கொள்ள முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

துபாயில் குவாரன்டைனை முடித்துள்ள ஆர்சிபி அணியின் வீரர்கள் நேற்று நெட் பயிற்சியில் ஈடுபட்டனர்.

நெட் பயிற்சியில் ஆர்சிபி

நெட் பயிற்சியில் ஆர்சிபி

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 5 மாதங்களாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்காத இந்திய அணியினர் தற்போது ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்காக துபாயில் முகாமிட்டுள்ளனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்களும் துபாயில் தங்களது குவாரன்டைனை முடித்துவிட்டு நேற்றைய தினம் நெட் பயிற்சியில் ஈடுபட்டனர்.

பயத்தை அளித்தது -விராட்

பயத்தை அளித்தது -விராட்

இந்நிலையில் 5 மாதங்களுக்கு பிறகு நெட் பயிற்சியில் ஈடுபட்டது தனக்கு பயத்தை அளித்ததாக ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். ஆயினும் கடந்த 5 மாதங்களாக ஊரடங்கு காலத்திலும் தன்னுடைய பிட்னஸ் பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டதால் நெட் பயிற்சி தான் நினைத்ததைவிடவும் சிறப்பாக இருந்ததாகவும் விராட் குறிப்பிட்டுள்ளார்.

பயிற்சியில் ஈடுபட்ட டேல் ஸ்டெயின்

பயிற்சியில் ஈடுபட்ட டேல் ஸ்டெயின்

கடந்த 5 மாதங்களாக பேட்டை கைகளாலும் தொடாத நிலையில் தான் மிகவும் பயத்துடன் நெட் பயிற்சியை எதிர்கொண்டதாகவும் விராட் கூறியுள்ளார். ஆர்சிபியின் இந்த பயிற்சி முகாமில் தென்னாப்பிரிக்க அணியின் பௌலர் டேல் ஸ்டெயின் மற்றும் அணியின் இயக்குநர் மைக் ஹெசன் ஆகியோரும் பங்கேற்றனர். இந்நிலையில் ஆர்சிபியின் இந்த முதல்கட்ட பயிற்சி முகாமின் வீடியோவை அந்த அணி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

சிறப்பாக பயிற்சி.. விராட் பாராட்டு

சிறப்பாக பயிற்சி.. விராட் பாராட்டு

மேலும் பயிற்சியில் யுஸ்வேந்திர சஹல், வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் நதீம் ஆகியோரும் பங்கேற்ற நிலையில், அவர்கள் அனைவரும் சிறப்பான பௌலிங்கை வெளிப்படுத்தியதாகவும் விராட் கோலி பாராட்டு தெரிவித்துள்ளார். மொத்தத்தில் ஆர்சிபி அணி நல்ல துவக்கத்தை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Story first published: Sunday, August 30, 2020, 20:31 [IST]
Other articles published on Aug 30, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+