Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புத்தாண்டில் புதுப்பொலிவோடு களமிறங்கும் டோணி படை.. ஆஸி.யுடன் நாளை முதல் ஒருநாள் போட்டி

பெர்த்: இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் நடுவேயான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் நாளை நடைபெறுகிறது.

டோணி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது.

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி பெர்த் மைதானத்தில் நாளை நடக்கிறது. இதற்காக ஏற்கனவே ஆஸி. சென்றுள்ள இந்திய அணி, அங்கு மேற்கு ஆஸ்திரேலிய லெவனுக்கு எதிராக இரண்டு ஆட்டங்களில் பங்கேற்றது. இரண்டு பயிற்சி ஆட்டத்திலும் வெற்றி பெற்றது.

பயிற்சியாட்டங்களில் அருமை

பயிற்சியாட்டங்களில் அருமை

பயிற்சி ஆட்டத்தில் ஷிகர் தவான், ரோகித் ஷர்மா, விராட் கோஹ்லி, ரகானே, அஸ்வின், ஜடேஜா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் இந்திய அணியினர் உற்சாகமாக உள்ளனர். இருப்பினும் ஆஸி. அணியை அதந் சொந்த மண்ணில் வீழ்த்த இந்திய அணி மிகவும் கடுமையாக போராட வேண்டும்.

பழிவாங்க காத்திருப்பு

பழிவாங்க காத்திருப்பு

இந்திய அணி கடைசியாக ஆஸ்திரேலியா மண்ணில் உலக கோப்பையில் விளையாடியது. கடந்த மார்ச் மாதம் சிட்னியில் நடந்த அரை இறுதியில் இந்திய அணி 95 ரன்னில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. இதனால் உலக கோப்பை கனவு கலைந்த நிலையில், அதற்கு பழிவாங்க டோணி படை தயாராகியுள்ளது.

புத்தாண்டில் புதுப்பொலிவு

புத்தாண்டில் புதுப்பொலிவு

கடந்த ஆண்டு இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு அதிருஷ்டம் வாய்க்கவில்லை. வங்கதேசம் மற்றும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்களை இந்திய அணி அடுத்தடுத்து இழந்தது. இதனால் கேப்டன் டோணி மீது நெருக்கடி உள்ளது. 2016 பிறந்துள்ள நிலையில், ஆஸ்திரேலியா தொடரில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் அவருக்கு உள்ளது.

பலம் வாய்ந்த ஆஸி.

பலம் வாய்ந்த ஆஸி.

ஆஸ்திரேலிய அணி கடைசியாக முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான தொடரை 3-2 என்ற கணக்கில் வென்றது. இதனால் இந்திய அணியையும் வீழ்த்தும் நம்பிக்கையில் உள்ளது. ஆஸி.க்கு எதிராக இந்தியா முழுத்திறமையை காட்டினால்தான் வெல்ல முடியும்.

ஆஸி. ஆதிக்கம்

ஆஸி. ஆதிக்கம்

இந்தியா-ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் இதுவரை 118 ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ளன. இதில் இந்தியா 40 ஆட்டத்திலும், ஆஸ்திரேலியா 68 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. 10 ஆட்டத்தில் முடிவு இல்லை.

இந்திய அணி

இந்திய அணி

டோணி (கேப்டன்), ஷிகர் தவான், ரோகித் ஷர்மா, விராட் கோஹ்லி, ரஹானே, மனிஷ் பாண்டே, ரவிந்திர ஜடேஜா, அஸ்வின், உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார், இஷாந்த் சர்மா, அக்ஷர் படேல், குர்கெரத்சிங், பரீந்தர் சரண்.

ஆஸ்திரேலியா அணி

ஆஸ்திரேலியா அணி

ஸ்டீவன் சுமித் (கேப்டன்), வார்னர், ஆரோன் பின்ச், ஜார்ஜ் பெய்லி, மேக்ஸ்வெல், மிட்சல் மார்ஷ், மேத்யூ வேட், கனே ரிச்சர்ட்சன், ஷான் மார்ஷ், பால்க்னெர், ஹசில்வுட், ஸ்காட் போலண்ட், ஜோயல் போரிஸ். நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி காலை 8.50 மணிக்கு தொடங்குகிறது.

Story first published: Monday, January 11, 2016, 13:59 [IST]
Other articles published on Jan 11, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+