Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஓவர் டூ ஜோஹன்னஸ்பர்க்.. நாளை இந்தியா- தெ. ஆ முதல் ஒரு நாள் போட்டி!

ஜோஹன்னஸ்பர்க்: அதிரடியான ரன் குவிப்பாளர்கள், வகுத்த வியூகங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருவதால் ஏற்பட்டுள்ள தன்னம்பிக்கை .. இன்ன பிற நம்பிக்கைகளுடன் நாளை முதல் ஒரு நாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை, ஜோஹன்னஸ்பர்க்கில் சந்திக்கிறது இந்தியா.

இந்திய வீரர்களுக்கு எதிராக தனது வேகப் பந்து வீச்சாளரக்ளை அஸ்திரமாக பயன்படுத்தப் போவதாக ஏற்கனவே தென் ஆப்பிரிக்கா மிரட்டியுள்ளது.

இருப்பினும் ஷிகர் தவான், ரோஹித் சர்மா, விராத் கோஹ்லி ஆகியோர் இந்த வேகப் பந்து வீச்சுத் தாக்குதலை திறம்பட சமாளித்து முறியடிப்பார்கள் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.

3 போட்டிகள்

3 போட்டிகள்

இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையே 3 ஒரு நாள் போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது. நாளை முதல் ஒரு நாள் போட்டி நடைபெறவுள்ளது.

மும்மூர்த்திகள் பட்டையைக் கிளப்புவரா...

மும்மூர்த்திகள் பட்டையைக் கிளப்புவரா...

இந்தியா பெரிதும் நம்பியுள்ள மும்மூர்த்திகள் தவான், ரோஹித் சர்மா, விராத் கோஹ்லி ஆகியோர்தான். இந்த மூன்று பேரும் இந்த ஆண்டில் இதுவரை தலா ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்து அட்டகாசமான பார்மில் உள்ளனர்.

ஆளுக்கு 50 சராசரி

ஆளுக்கு 50 சராசரி

மேலும் இந்த மூன்று வீரர்களின் சராசரியுமே 50க்கும் மேல் உள்ளது. புள்ளிவிவரங்களைப் பார்த்தால் இப்போதைக்கு மைதானத்தில் பயங்கரமாக உறுமிக் கொண்டிருக்கும் ரன் புலிகள் இவர்கள்தான்.

அடுத்தடுத்து அதிரடி

அடுத்தடுத்து அதிரடி

இந்தியாவில் நடந்த போட்டிகள், இங்கிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகள், ஜிம்பாப்வேயில் நடந்த போட்டிகள் என அனைத்திலும் இவர்கள் ஜொலித்துள்ளனர்.

ரெய்னா- யுவராஜ்தான் பெரும் துயரம்

ரெய்னா- யுவராஜ்தான் பெரும் துயரம்

அதேசமயம் சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங் ஆகியோர்தான் பெரும் கவலைக்குரியவர்களாக உள்ளனர். இருவருமே சரிவர ஆடாத நிலையில்தான் தென் ஆப்பிரிக்காவுக்கு வந்துள்ளனர்.

டோணி வழக்கம் போல.. ஜில் ஜில் கூல் கூல்

டோணி வழக்கம் போல.. ஜில் ஜில் கூல் கூல்

அதேசமயம், கேப்டன் டோணி வழக்கம் போல தனது ஸ்டைலில் அதிரடியாக ஆடிக் கொண்டுதான் இருக்கிறார். இந்த ஆண்டில் அவரும் பேட்டிங், கேப்டன்ஷிப், விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாகவே செயல்பட்டுள்ளார்.

23 போட்டி.. சராசரி 66.. 8 நாட் அவுட்

23 போட்டி.. சராசரி 66.. 8 நாட் அவுட்

இந்த ஆண்டு 23 போட்டிகளில் ஆடி சராசரியாக 66.90 வைத்துள்ளார் டோணி. மேலும் எட்டு போட்டிகளில் அவர் நாட் அவுட் ஆகும். நான்கு அரை சதம் போட்டுள்ளார். ஒரு சதமும் இவரது பாக்கெட்டில்.

தென் ஆப்பிரிக்க பந்து வீச்சு

தென் ஆப்பிரிக்க பந்து வீச்சு

அதேசமயம், தென் ஆப்பிரிக்காவைப் பொறுத்தவரை டேல் ஸ்டெயின், மார்னி மார்க்கல், வெர்மான் பிலான்டர், ஜேக்கஸ் கல்லிஸ் ஆகியோர் சிறந்த பந்து வீச்சுடன் காத்துள்ளனர்.

இடி மின்னல் உறுதி...

இடி மின்னல் உறுதி...

எனவே, நாளைய போட்டி இனி மின்னலுடன் கூடிய பயங்கர போட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Story first published: Wednesday, December 4, 2013, 17:22 [IST]
Other articles published on Dec 4, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+