நாளை முதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்தில் ஆதிக்கம் செலுத்துமா இந்தியா?
நேப்பியர்: இந்தியா- நியூசிலாந்து இடையே எதிரான முதல் ஒருநாள் போட்டி நாளை நேப்பியாரில் தொடங்குகிறது.
டோணி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட்டில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நேப்பியரில் நாளை நடைபெற உள்ளது.
தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இழந்த இந்திய அணி நியூசிலாந்து பயணத்தில் சிறப்பாக ஆட வேண்டிய நெருக்கடியில் உள்ளது.

2009-ல் ஆதிக்கம்
2009-ம் ஆண்டு இந்திய அணி நியூசிலாந்தில் கடைசியாக விளையாடியபோது டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை கைப்பற்றி இருந்தது. இதனால் டோணி தலைமையிலான இந்திய அணி நம்பிக்கையுடன் உள்ளது.

வலுவான அணி
ஷிகார் தவான், கோஹ்லி, ரெய்னா, கேப்டன் டோணி போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் முகமது ஷமி, புவனேஸ்வர்குமார், அஸ்வின் போன்ற சிறந்த பந்துவீச்சாளர்களும் இந்திய அணியில் உள்ளனர்.

வலு காட்டிய நியூஸி.
நியூசிலாந்து அணி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக டெஸ்ட் மற்றும் 20 ஓவர் தொடரை கைப்பற்றியது. ஒருநாள் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.

கலக்கும் வீரர்கள்
36 பந்தில் சதம் அடித்த கோரி ஆண்டர்சன், டெய்லர், ரைடர், குப்தில், கேப்டன் மெக்குலம் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், மில்ஸ், சவுத்தி, மிலின் போன்ற சிறந்த பவுலர்களும் நியூசிலாந்து அணியில் உள்ளனர்.

விறுவிறு?
இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் நாளைய ஆட்டம் விறு விறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான 5 ஒருநாள் போட்டியும் பகல்- இரவாக நடைபெறுகிறது.


Click it and Unblock the Notifications