Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் நாளை தொடக்கம்.. டெலிகேட் பொசிஷனில் இந்தியா!

ஆன்டிகுவா: கோஹ்லி தலைமையிலான, இந்திய கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவுகள் நாட்டில், சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

முதல் டெஸ்ட் போட்டி, நாளை, இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு, ஆண்டிகுவாவில் தொடங்குகிறது.

இப்போட்டியில், 5 ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன்களுடன் களமிறங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. எனவே ரோகித் ஷர்மா மற்றும், புஜாரா அணியில் சேர்க்கப்படுவார்களா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

அணிலாக உதவுவாரா அனில் கும்ப்ளே

அணிலாக உதவுவாரா அனில் கும்ப்ளே

அனில் கும்ப்ளே பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு இந்திய அணி ஆட உள்ள முதல் போட்டி இது என்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. டெஸ்ட் போட்டிகளில் அனில் கும்ப்ளேவுக்கு கிடைத்த நீண்ட அனுபவம், இந்திய அணி வெற்றிக்கு பக்க பலமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

சுழற்பந்துக்கு சாதகம்

சுழற்பந்துக்கு சாதகம்

ஆன்டிகுவா பிட்ச் மிகவும் மந்தமானது என்பதால் அதிக ஸ்பின்னர்களோடு களமிறங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

எனவே அஸ்வின், ரவீந்திர ஜடேஜா வரிசையில், அமித் மிஸ்ராவுக்கும் அணியில் இடம் கிடைக்கும் என்று தெரிகிறது.

முகமது ஷமியா, உமேஷ் யாதவா?

முகமது ஷமியா, உமேஷ் யாதவா?

வேகப்பந்து வீச்சாளர்களை பொறுத்தளவில், காயத்தில் இருந்து மீண்ட முகமது ஷமியை களமிறக்குவதா அல்லது முந்தைய டெஸ்ட் தொடர்களில் சிறப்பாக செயல்பட்ட உமேஷ் யாதவை களமிறக்குவதா என்பதில் குழப்பம் நீடிக்கிறது.

இஷாந்த் ஷர்மா பக்கா

இஷாந்த் ஷர்மா பக்கா

கடந்த மேற்கு இந்திய தீவுகள் சுற்றுப் பயணத்தின்போது தொடர் நாயகன் விருதை தட்டி சென்ற வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா இடத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை.

டெலிகேட் பொசிஷன்

டெலிகேட் பொசிஷன்

எந்தெந்த வீரர்களை 11 பேர் கொண்ட அணியில் சேர்ப்பது என்பதில் டெலிகேட் பொஷிஷனில் சிக்கியுள்ளது இந்தியா. அதேநேரம், அனுபவமில்லாத மேற்கிந்திய தீவுகள் அணியில் பெரிய குழப்பம் இல்லை.

அனுபவம் இல்லை

அனுபவம் இல்லை

13 பேர் கொண்ட அணியைத்தான் மேற்கிந்திய தீவுகள் வாரியம் அறிவித்தது. சாமுவேல்ஸ் மற்றும் பிராவோ ஆகியோரை தவிர்த்து பிற வீரர்கள் அதிக அனுபவம் இல்லாதவர்கள். மேற்சொன்ன இரு வீரர்களும் கூட தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி வருகிறார்கள்.

ஹாட்ரிக் வெற்றி

ஹாட்ரிக் வெற்றி

இந்தியா கடந்த 2 டெஸ்ட் தொடர்களை மேற்கிந்திய தீவுகள் மண்ணில் வென்றதை போல, இம்முறையும், வென்று ஹாட்ரிக் வெற்றியை சுவைக்குமா என்று ரசிகர்கள் ஆர்வமோடு எதிர்பார்க்கிறார்கள். இந்த போட்டித்தொடர் டென் நெட்வொர்க் சேனலில் நேரடியாக ஒளிபரப்பாகும்.

Story first published: Wednesday, July 20, 2016, 14:53 [IST]
Other articles published on Jul 20, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+