Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கட்டாக்கில் நாளை அட்டாக்கைக் காட்டுமா இந்தியா...?

கட்டாக்: கட்டாக்கில் இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான ஐந்தாவது ஒரு நாள் போட்டி நாளை நடைபெறுகிறது.

ஆனால் இந்தப் போட்டியும், நான்காவது போட்டியைப் போலவே மழையால் பாதிக்கப்படும் அபாயம் நிலவுவதால் இந்திய அணி கவலையுடன் உள்ளது.

மொத்தம் 7 போட்டிகள் கொண்ட தொடரில் நான்கு போட்டிகள் முடிவடைந்துள்ளன. அதில் 2 போட்டிகளில் ஆஸ்திரேலியாவும், ஒரு போட்டியில் இந்தியாவும் வென்றுள்ளன. ஒரு போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. எனவே மீதமுள்ள 3 போட்டிகளிலும் இந்தியா வென்றாக வேண்டிய நிலை உள்ளது. அப்போதுதான் தொடரை வெல்ல முடியும்.

நான்கு நாட்களாக மழை

நான்கு நாட்களாக மழை

கட்டாக்கில் கடந்த நான்கு நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் பாராமதி ஸ்டேடியம் கவலைக்குரியதாக மாறியுள்ளது.

அடுத்த 2 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு

அடுத்த 2 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு

அடுத்த 2 நாட்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே நாளைய போட்டியும் நடைபெறுமா என்பது பெரும் சந்தேகமாகவே உள்ளது.

பிராக்டிஸ் பண்ண முடியவில்லை

பிராக்டிஸ் பண்ண முடியவில்லை

பிட்ச் மூடி வைக்கப்பட்டுள்ளது என்றாலும் மைதானத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் இரு அணிகளாலும் இன்று பயிற்சியில் ஈடுபட முடியவில்லை.

மழை பெய்தாலும் டிக்கெட் விற்பனைக்குக் குறைவில்லை

மழை பெய்தாலும் டிக்கெட் விற்பனைக்குக் குறைவில்லை

மழை பெய்து கொண்டிருந்தாலும் கூட ரசிகர்கள் போட்டியைக் காண ஆவலுடன் டிக்கெட் வாங்கியுள்ளனர். 45,000 பேர் அமரக் கூடிய வகையிலான இந்த ஸ்டேடியத்தில் கிட்டத்தட்ட அத்தனை டிக்கெட்களும் விற்றுத் தீர்ந்து விட்டன.

பந்து வீச்சால் கவிழ்ந்த இந்தியா

பந்து வீச்சால் கவிழ்ந்த இந்தியா

இந்திய அணியின் பேட்டிங் நன்றாக உள்ளது. ஆனால் பவுலிங்தான் பெரும் பிரச்சினையாகியுள்ளது. இந்திய மண்ணிலேயே இப்படி இந்தியா மண்ணைக் கவ்விக் கொண்டிருக்கிறது என்று ரசிகர்கள் கடுப்பாக உள்ளனர்.

இந்த நிலையில் நாளைய போட்டியை மழை வந்து கெடுத்து விடும் வாய்ப்பிருப்பதால் ரசிகர்களுக்கு கூடுதல் மனச்சுமை ஏற்பட்டுள்ளது.

Story first published: Friday, October 25, 2013, 18:02 [IST]
Other articles published on Oct 25, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+