Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய கோப்பை: நடப்பு சாம்பியன் இலங்கைக்கு ஷாக் கொடுக்குமா ஐக்கிய அரபு எமிரேட்ஸ்?

டாக்கா: ஆசிய கோப்பை டி20 தொடரில் இன்று, குட்டி அணியான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ), நடப்பு சாம்பியன் இலங்கையை எதிர்கொள்கிறது. இலங்கை அணியை அரபு அணி, அதிர்ச்சி தோல்விக்கு உள்ளாக்குமா என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் முதல்முறையாக டி20 வடிவில் இவ்வாண்டு முதல் நடைபெற தொடங்கியுள்ளது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய டெஸ்ட் ஆடும் தேசங்கள் தவிர்த்து, புதிதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியும், இந்த தொடரில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளது.

இதற்கான தகுதி சுற்று போட்டிகளில், ஹாங்காங்கை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், ஓமன் அணியை 71 ரன்கள் வித்தியாசத்திலும், ஆப்கானிஸ்தானை 16 ரன்கள் வித்தியாசத்திலும் வென்று, யு.ஏ.இ அணி, முக்கிய போட்டிகளில் ஆட தகுதி பெற்றுள்ளது.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

ஆசிய கோப்பையின் முதல் ஆட்டத்தில் நேற்று வங்கதேசத்தை இந்தியா வீழ்த்தி வெற்றி பெற்ற நிலையில், இன்றைய போட்டியில், நடப்பு சாம்பியன் இலங்கை-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதுகின்றன.

இன்று இரவு

இன்று இரவு

இந்திய நேரப்படி, இரவு 7 மணிக்கு தொடங்கும் இப்போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. குட்டி அணி என்றபோதிலும், தகுதி சுற்றில் 3 அணிகளை அடுத்தடுத்து தோற்கடித்து வீறு நடைபோட்டு வந்துள்ள அரபு அமீரக அணி மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு உள்ளது.

இலங்கையின் பலம்

இலங்கையின் பலம்

இலங்கையை பொறுத்தளவில், காயத்தால் இந்திய சுற்றுப்பயணத்தில் ஆடாத லசித் மலிங்கா (கேப்டன்), டெஸ்ட் கேப்டன், மேத்யூஸ், இருபுறமும் பந்தை ஸ்விங் செய்யக்கூடியவரான, நுவான் குலசேகரா, முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரங்கனா ஹீரத் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளது பலமாகும்.

பந்து வீச்சாளர்கள்

பந்து வீச்சாளர்கள்

வேகப்பந்து வீச்சை மலிங்கா, குலசேகரா மற்றும் இளம் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்தா சமீரா ஆகியோர் பார்த்துக்கொள்ள, சசித்ரா சேனநாயகே, ஹீரத் இருவரும் சுழற்பந்து துறையை கவனி்த்துக்கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம்.

அரபு அணி பலம்

அரபு அணி பலம்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை பொறுத்தளவில், மிதவேக பந்து வீச்சாளர் முகமது நவீத் நம்பிக்கை நட்சத்திரமாகும். தகுதி சுற்று போட்டிகளில் அவர் மொத்தம் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன் முகமது சஷாத் மொத்தம் 111 ரன்கள் குவித்தார். இதுதவிர இந்தியாவை பூர்வீகமாக கொண்ட விக்கெட் கீப்பர் ஸ்வப்னில் பாட்டீலும் அணிக்கு வலு சேர்க்கிறார்.

இலங்கை அணி விவரம்

இலங்கை அணி விவரம்

லசித் மலிங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சண்டிமால் (விக்கெட் கீப்பர்), திலகரத்னே தில்ஷன், நிரோசன் டிக்வெல்லா (விக்கெட் கீப்பர்), சேசன் ஜெயசூர்யா, மிலிண்டா ஸ்ரீவர்தனே, தசுன் சனகா, சமரா கப்புகெதரா, நுவான் குலசேகரா, துஷ்மந்தா சமீரா, திசாரா பெரேரா, சசிதா சேனநாயகே, ரங்கனா ஹீரத், ஜெப்ரி வன்டர்சே.

ஐக்கிய அரபு அமீரகம்

ஐக்கிய அரபு அமீரகம்

அம்ஜத் ஜாவீத் (கேப்டன்), முகமது கலீம், ரோகன் முஸ்தபா, சைமான் அன்வர், முகமது ஷசாத், ஸ்வப்னில் பாட்டீல் (துணைகேப்டன்-விக்கெட் கீப்பர்), உஸ்மான் முஸ்தாக், அகமது ரசா, ஜாகீர் மக்சூட், முகமது நாவீத், பர்கான் அகமது, காதர் அகமது, முகமது உஸ்மான், பகத் தாரிக், சக்லைன் ஹைதர்.

Story first published: Thursday, February 25, 2016, 10:34 [IST]
Other articles published on Feb 25, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+