Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாம்பியன்ஸ் டிராபி: கோஹ்லி-தவான் அபாரம்.. தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்த இந்தியா

லண்டன்: சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில், அரை இறுதிக்கு தகுதி பெறுவதற்கான முக்கிய போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி அசத்தியது இந்தியா.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முதல் போட்டியில் பாகிஸ்தானை எளிதில் வீழ்த்தியது நடப்பு சாம்பியனான இந்தியா. ஆனால் அதற்கடுத்த போட்டியில் இலங்கையிடம் அதிர்ச்சியளிக்கும் விதமாக வீழ்ந்தது இந்தியா. இதனால் அரையிறுதி வாய்ப்பு தள்ளிப்போனது.

இந்த நிலையில், இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் இன்று மோதின. இந்தியா-தென் ஆப்பிரிக்கா ஆகிய, இரு அணிகளும் தலா 2 புள்ளிகளுடன் உள்ள நிலையில் அரை இறுதிக்குள் இந்த இரு அணிகளில் ஏதேனும் ஒரு அணி மட்டுமே செல்ல முடியும் என்ற நிலை இருந்தது.

களமிறங்கிய அஸ்வின்

களமிறங்கிய அஸ்வின்

அஸ்வின் களமிறக்கப்படாமல் உள்ளது, இந்தியாவுக்கு பலவீனமாக கருதப்பட்டதால் இன்றைய போட்டியில் அவர் களமிறக்கப்பட்டார். உமேஷ் யாதவுக்கு பதில் அவர் சேர்க்கப்பட்டார்.

நிதான ஆட்டம்

நிதான ஆட்டம்

இதையடுத்து நிதானமாக பேட்டிங் செய்தது தென் ஆப்பிரிக்கா. எனவே 76 ரன்களுக்குத்தான் தென் ஆப்பிரிக்காவின் முதல் விக்கெட்டை இந்தியாவால் வீழ்த்த முடிந்தது. ஹசிம் ஆம்லா 35 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்து வீச்சில் டோணியிடம் கேட்ச் கொடுத்தார். டிகாக் 53 ரன்களில் ஜடேஜா பந்தில் அவுட்டானார். இதன்பிறகு வந்த பேட்ஸ்மேன்கள் வரிசையாக நடையை கட்டினர்.

ரன்அவுட் மழை

ரன்அவுட் மழை

சிறிது தாக்குப்பிடித்த பாப் டுப்ளெசிஸ் 36 ரன்களில் ஹர்திக் பாண்ட்யா பந்தில் வெளியேறினார். அதிரடி வீரர் டிவில்லியர்ஸ் 16 ரன்களிலும், டேவிட் மில்லர் 1 ரன்னிலும் ரன்அவுட்டாகினர். கடைசி விக்கெட்டாக இம்ரான் தாஹீரும் ரன்அவுட்டானார். ஃபீல்டிங்கில் கலக்கிய இந்திய வீரர்கள் 3 தென் ஆப்பிரிக்க வீரர்களை ரன்அவுட் செய்தனர்.

பவுலர்கள் அபாரம்

பவுலர்கள் அபாரம்

ஜீன் பால் டுமினி 41 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து நாட்அவுட்டாக நின்றார். இந்திய தரப்பில், ஹர்திக் பாண்ட்யா ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர். புவனேஸ்வர்குமார் மற்றும் பும்ரா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ரோகித் ஷர்மா ஏமாற்றம்

ரோகித் ஷர்மா ஏமாற்றம்

இதையடுத்து 192 ரன்கள் என்ற வெற்றி இலக்கோடு இந்திய அணி ஆடியது. நிதானமாக ஆட்டத்தை ஆரம்பித்தது இந்திய அணி. எனவே, 10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 37 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் ஷர்மா, 1 சிக்சர், 1 பவுண்டரியுடன் 12 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மோர்கல் பந்தில் விக்கெட் கீப்பர் டிகாக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

தவான்-கோஹ்லி

தவான்-கோஹ்லி

இருப்பினும் தவானுடன், கேப்டன் கோஹ்லி ஜோடி சேர்ந்து அருமையாக ஆட்டத்தை தொடர்ந்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்திருந்தது. சிறப்பாக ஆடிய தவான், 78 ரன்களில் அவுட்டானார். தாகிர் பந்தில் டுப்ளசியிடம் அவர் கேட்ச் கொடுத்தார். அவர், 12 பவுண்டரிகளும், 1 சிக்சரும் விளாசினார்.

அரையிறுதிக்கு தகுதி

அரையிறுதிக்கு தகுதி

இதன்பிறகு எவ்வளவோ முயன்றும், இந்திய விக்கெட்டுகளை வீழ்த்த தென் ஆப்பிரிக்க பவுலர்களால் முடியவில்லை. எனவே 38வது ஓவரிலேயே இந்தியா 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 193 ரன்களை குவித்தது. இதனால் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை ருசித்து, அரையிறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா.

அபார வெற்றி

அபார வெற்றி

கோஹ்லி 76 ரன்களுடனும், யுவராஜ் 23 ரன்களுடனும் கடைசி வரை களத்தில் நின்றனர். யுவராஜ் இமாலய சிக்சருடன் போட்டியை முடித்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறப்பாக பந்து வீசி 28 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா ஆட்ட நாயகன் பட்டம் வென்றார்.

Story first published: Sunday, June 11, 2017, 22:03 [IST]
Other articles published on Jun 11, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+