Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நாளைய போட்டியில் ஜெயிச்சுட்டா போதும்.. 4வது "கப்"புக்குப் பக்கத்தில் போயிடலாம்!

மிர்பூர்: 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரின் அரை இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நழைய இந்திய அணி மும்முரமாகி வருகிறது. 3 முறை சாம்பியன் ஆன இந்தியா, இந்தத் தொடரில் இதுவரை ஒரு போட்டியில் கூட தோற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய வீரர்கள் ஒவ்வொரு போட்டியிலும் எதிரணியினை துவம்சம் செய்தே வென்று வந்துள்ளனர் என்பதால் நாளைய அரை இறுதி்ப் போட்டியிலும் இந்தியா அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

மிர்பூரில் உள்ள பங்களா தேசிய ஸ்டேடியத்தில் இந்தப் போட்டி நாளை நடைபெறுகிறது.

டிராவிட் படை

டிராவிட் படை

ராகுல் டிராவிடை பயிற்சியாளராகக் கொண்ட இந்திய அணி இந்தத் தொடரில் மாயாஜாலம் செய்து வருகிறது. அயர்லாந்து, நியூசிலாந்து, நேபாளம் ஆகியவற்ரை வீழ்த்தி லீக் முடிவில் முதலிடத்தைப் பெற்றது இந்தியா.

காலிறுதியில் நமீபியாவை நசுக்கி

காலிறுதியில் நமீபியாவை நசுக்கி

காலிறுதிப் போட்டியில் நமீபியாவை 197 ரன்கள் வித்தியாசத்தில் நசுக்கி அரை இறுதிக்கு முன்னேறியது இந்தியா.

அட்டகாச பார்மில் பந்த், சர்பாரஸ் கான்

அட்டகாச பார்மில் பந்த், சர்பாரஸ் கான்

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் மற்றும் சர்பாரஸ் கான் ஆகிய இருவரும் நல்ல பார்மில் உள்ளனர். பந்த் இதுவரை 252 ரன்களைக் குவித்துள்ளார். கான் 244 ரன்கள் எடுத்துள்ளார்.

அர்மான் ஜாபர் - மஹிபால் லோம்ரார்

அர்மான் ஜாபர் - மஹிபால் லோம்ரார்

அதேபோல அர்மான் ஜாபர், மஹிபால் லோம்ரார் ஆகியோரும் நல்ல பார்மில் உள்ளனர். பந்து வீச்சில் இவர்கள் அசத்துகின்றனர். கூடவே அவேஷ் கானும் சிறப்பாக பந்து வீசி வருகிறார்.

2வது இடத்திலிருந்து வந்த இலங்கை

2வது இடத்திலிருந்து வந்த இலங்கை

மறுபக்கம் இலங்கை அணி லீக் போட்டிகள் முடிவில் தனது பிரிவில் 2வது இடத்தைப் பிடித்தது. காலிறுதியில் அது இங்கிலாந்தை சிறப்பான முறையில் வென்று அரை இறுதிக்கு வந்துள்ளது.

4வது முறை கனவு பலிக்குமா?

4வது முறை கனவு பலிக்குமா?

இந்திய அணி நான்காவது முறையாக சாம்பியனாகுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். நாளை அது தெரிந்து விடும்.

இந்திய அணி

இந்திய அணி

இந்தியா - இஷான் கிஷன், கலீல் அகமது, அன்மோல்ப்ரீத் சிங், அர்மான் ஜாபர், அவேஷ் கான், ராகுல் பத்னம், ரிக்கி பூயி, மயங்க் டகர், சர்பாரஸ் கான், அமந்தீப் காரே, மஹிபால் லோம்ரார், சுபம் மவி, ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர், ஜீசன் அன்சாரி.

Story first published: Monday, February 8, 2016, 14:31 [IST]
Other articles published on Feb 8, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+