Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸ்திரேலியாவை வீழ்த்துமா 'அதிர்ச்சி வைத்தியர்' வங்கதேசம்? பிரிஸ்பேனில் நாளை மோதல்

பிரிஸ்பேன்: பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவும், அதிர்ச்சி வைத்திய நிபுணர் வங்கதேசமும் நாளை இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்கும் குரூப் ஏ-பிரிவு லீக் போட்டியில் சந்திக்க உள்ளன. ஆனால் புயல் காரணமாக போட்டியே கைவிடப்படும் சூழ்நிலை ஏற்படலாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலியா தனது முதல் லீக் ஆட்டத்தில் 111 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. வங்கதேசம் தனது முதல் போட்டியில், 105 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.

வங்கதேசம் எழுச்சியா

வங்கதேசம் எழுச்சியா

வங்கதேசம் கடந்த 6 போட்டிகளில் ஒன்றில் கூட தோற்கவில்லை. ஆப்கானிஸ்தானை வீழ்த்திய விதத்தை பார்த்தாலும், வங்கதேசம் எழுச்சி பெற்றுள்ளதாகவே தெரிகிறது.

ஆஸி. கை ஓங்கியுள்ளது

ஆஸி. கை ஓங்கியுள்ளது

ஆனால் இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வங்கதேசம் விளையாடிய 19 ஒருநாள் போட்டிகளில் 2005ம் ஆண்டு நடைபெற்ற ஒரு போட்டியை தவிர மற்ற அனைத்து போட்டிகளிலுமே ஆஸ்திரேலியாதான் வெற்றி பெற்றுள்ளது. இதில் 1999 மற்றும் 2007 உலக கோப்பை போட்டிகளும் அடங்கும். எனவே இவ்விரு நாடுகளை ஒப்பிட்டால் ஆஸ்திரேலியா கைகளே ஓங்கியிருப்பது நன்கு தெரிகிறது.

அதிர்ச்சியளிக்குமா

அதிர்ச்சியளிக்குமா

ஆயினும் அவ்வப்போது பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி தோல்வியை அளிக்கும் வங்கதேசத்தையும் குறைத்து மதிப்பிட முடியாது என்பதால் இந்த போட்டியை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது.

புயல், மழை

புயல், மழை

இதனிடையே பிரிஸ்பேனில் நாளை, புயல் காரணமாக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவ்வாறு போட்டி கைவிடப்பட்டால் இரு அணிகளுக்கும் பாதி புள்ளிகள் கிடைக்கும். ஒருவகையில் அது வங்கதேசத்துக்கு ஆதாயமே.

ஆஸ்திரேலிய அணி விவரம்

ஆஸ்திரேலிய அணி விவரம்

டேவிட் வார்னர், ஆரோன் பின்ச், ஷேன் வாட்சன், மைக்கேல் கிளார்க் (கேப்டன்), ஸ்டீவன் ஸ்மித், மிட்சேல் மார்ஷ், கிளன்மெக்ராத், பிராட் ஹேடின் (விக்கெட் கீப்பர்), மிட்சேல் ஜான்சன், மிட்சேல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ்.

வங்கதேச அணி விவரம்

வங்கதேச அணி விவரம்

தமிம் இக்பால், அனாமுல் ஹாக், சவுமியா சர்கார், மஹமதுல்லா, சாஹிப் அல் ஹசன், முஸ்பிகுர் ரஹிம் (விக்கெட் கீப்பர்), சபீர் ரகுமான், மஷ்ரப் மொர்டாசா (கேப்டன்), தைஜுல் இஸ்லாம், தஸ்கின் அகமது, ருபெல் ஹொசைன்.

Story first published: Friday, February 20, 2015, 17:53 [IST]
Other articles published on Feb 20, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+