தடுமாறும் இலங்கையும், தாறுமாறு வங்கதேசமும் நாளை மோதல்!
மெல்போர்ன்: உலக கோப்பையில் இதுவரை தடுமாறிக் கொண்டுள்ள இலங்கை, நாளை வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.
வங்கதேசம் தனது முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 105 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது. ஆஸ்திரேலியாவுடனான போட்டி மழையால் கைவிடப்பட்டதால் ஒரு புள்ளியை பெற்றது.

தோல்வி பெறாத அணி
எனவே நடப்பு உலக கோப்பையில் இதுவரை தோல்வி பெறாத அணியாகவே வலம் வருகிறது வங்கதேசம். அத்துடன், கடந்த ஆறு ஒரு நாள் போட்டிகளில் ஒன்றில் கூட தோற்றதில்லை என்ற பெருமையும் உள்ளது.

இலங்கை தடுமாற்றம்
ஆனால் இலங்கை அணி தனது முதல் ஆட்டத்தில் 98 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் பரிதாபமாக தோற்றது. இரண்டாவது ஆட்டத்தில் சிறு அணியான ஆப்கானிஸ்தானிடம் போராடி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜெயவர்த்தனே சதம் அடித்ததை தவிர்த்தால், அந்த போட்டியில் இலங்கை வெறும் பூஜ்யமாகவே காட்சியளித்தது.

நாளை மோதல்
இந்த சூழ்நிலையில், மெல்போர்ன் மைதானத்தில், இந்திய நேரப்படி, நாளை காலை 9 மணிக்கு தொடங்க உள்ள போட்டியில் இலங்கை-வங்கதேசம் சந்திக்கின்றன.

நெருக்கடியில் இலங்கை
இந்த போட்டியில் பெரிய ரன் ரேட் விகிதத்தில் வெற்றி பெற்றால்தான் இழந்த தன்னம்பிக்கையை மீட்டெடுக்க முடியும் என்ற கட்டாயத்தில் இலங்கை உள்ளது.


Click it and Unblock the Notifications