Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஸ்பின்னுக்கும் பேட்டிங்கிற்கும் சண்ட.. முதல் செமி பைனலில் நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு

டெல்லி: 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதலாவது அரை இறுதியில் நியூசிலாந்து-இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன.

6வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர்-10 சுற்று, நேற்று முன்தினத்துடன் நிறைவு பெற்றது. இதன் முடிவில் குரூப்1-ல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்தும், குரூப்-2ல் இந்தியா மற்றும் நியூசிலாந்தும் அரை இறுதிக்கு தகுதி பெற்றன.

நடப்பு சாம்பியன் இலங்கை, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்பட எஞ்சிய 6 அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து ஊருக்கு திரும்பியுள்ளன.

முதல் அரையிறுதி

முதல் அரையிறுதி

இந்த நிலையில் டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் இன்று இரவு நடைபெற உள்ள முதலாவது அரை இறுதியில் நியூசிலாந்து-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

நியூசிலாந்து அபாரம்

நியூசிலாந்து அபாரம்

நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணி நியூசிலாந்து. சூப்பர்-10 சுற்றில் இந்தியாவை 47 ரன்கள் வித்தியாசத்திலும், ஆஸ்திரேலியாவை 8 ரன்கள் வித்தியாசத்திலும், பாகிஸ்தானை 22 ரன்கள் வித்தியாசத்திலும், வங்க தேசத்தை 75 ரன்கள் வித்தியாசத்திலும் வென்றிருந்தது நியூசிலாந்து.

ஸ்பின் பலம்

ஸ்பின் பலம்

அந்த அணியின் வெற்றிக்கு சுழற்பந்து வீச்சாளர்களே பக்கபலமாக உள்ளனர். நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டும் இதுவரை 20 விக்கெட்டுகளை சாய்த்து இருக்கிறார்கள். சூப்பர்-10 சுற்றில் சுழற்பந்து வீச்சாளர்கள் மூலம் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய அணியாக நியூசிலாந்து உள்ளது.

பலே பவுலர்கள்

பலே பவுலர்கள்

நியூசிலாந்து பவுலர்கள் ஓவருக்கு சராசரியாக 5.97 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து மற்ற அணிகளை காட்டிலும் எக்கனாமிக் ரேட்டில் முன்னணியில் இருக்கிறார்கள். சுழற்பந்து வீச்சாளர்கள் சான்ட்னெர் (9 விக்கெட்), சோடி (8 விக்கெட்) ஆகிய இருவரும் நியூசிலாந்து அணியின் மிக முக்கிய துருப்பு சீட்டுக்கள்.

பேட்டிங் வீக்

பேட்டிங் வீக்

பேட்டிங்கை பொறுத்தளவில், கொஞ்சம் தடுமாற்றம் தெரிகிறது. இதுவரை மார்ட்டின் கப்தில் மட்டுமே அரைசதம் அடித்திருக்கிறார். ஒருங்கிணைந்த அணியாக உள்ளதால், முதல்முறையாக இறுதி சுற்றை அடையும் ஆர்வத்தில் நியூசிலாந்து அணி உள்ளது.

அதிரடி பேட்டிங்

அதிரடி பேட்டிங்

இங்கிலாந்து அணியோ, நியூசிலாந்துக்கு நேர் எதிர். இந்த அணி பேட்டிங்கை மட்டுமே பெரிதாக நம்பியுள்ளது. தொடக்க ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசிடம் தோற்ற இங்கிலாந்து அணி அதன் பிறகு தென்ஆப்பிரிக்கா (2 விக்கெட் வித்தியாசம்), ஆப்கானிஸ்தான் (15 ரன்), இலங்கை (10 ரன்) ஆகிய அணிகளை வீழ்த்தி அரை இறுதியை எட்டியது. இதில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான லீக்கில் 230 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்து உலக சாதனை படைத்தது.

முன்னணி வீரர்கள்

முன்னணி வீரர்கள்

இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் (168 ரன்), ஜோஸ் பட்லர் (123 ரன்), ஜாசன் ராய் (105 ரன்) சிறப்பாக செயல்பட்டுள்ளனர். நியூசிலாந்தின் சுழலுக்கும், இங்கிலாந்தின் பேட்டிங்குக்கும் இடையேயான மோதலாகத்தான் இன்றைய போட்டி இருக்க போகிறது.

அனல் பறக்கும் மோதல்

அனல் பறக்கும் மோதல்

ஏற்கனவே 2010ம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள இங்கிலாந்து, இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழையும் ஆர்வத்தில் உள்ளது. டெல்லி பெரோசா கோட்லா ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஏதுவானது. ஆட்டம் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

Story first published: Wednesday, March 30, 2016, 18:46 [IST]
Other articles published on Mar 30, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+