கெயிலை தொடர்ந்து டிவில்லியர்சிடம் சிக்கும் இங்கிலாந்து.. இன்று தென் ஆப்பிரிக்காவுடன் மோதல்!
மும்பை: நேற்றுதான் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் புயலில் சிக்கி சின்னா பின்னமான இங்கிலாந்து, மற்றொரு அதிரடி புயல் டிவில்லியர்ஸ் மையம் கொண்டிருக்கும் தென் ஆப்பிரிக்காவுடன் இன்று மோத உள்ளது.
நேற்று முன்தினம் நடைபெற்ற உலக கோப்பை டி20 தொடரின் சூப்பர்-10 சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் தங்களுக்கு எதிராக 47 பந்துகளில் சதம் அடித்ததோடு எளிதில் தாங்கள் வீழ்த்தப்பட்டதை இங்கிலாந்து அணியினிர் மறந்திருக்க மாட்டார்கள்.
இந்நிலையில், இன்று அதே மைதானத்தில், தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது இங்கிலாந்து. மும்பை வான்கடே மைதானத்தில் இப்போட்டி இரவு 7.30 மணிக்கு துவங்குகிறது.

பலே பேட்டிங்
பாப் டுப்ளசிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியில், ஒன்டே போட்டியில், அதிவேக சதம் விளாசிய பெருமைக்கு சொந்தக்காரரான டிவில்லியர்ஸ், பவர் ஹிட்டர் டேவிட் மில்லர், ஜேபி டுமினி, குயின்டன் டி காக் போன்ற முன்னணி வீரர்கள் உள்ளனர்.

பந்து வீச்சு
டேல் ஸ்டெயின், ககிசோ ரபடா, கிறிஸ் மோரிஸ், ஆரோன் பன்கிசோ, இம்ரான் தாஹீர் போன்றோர் பந்து வீச்சுக்கு பலம் சேர்க்கிறார்கள்.

பவுலிங்தான்..
மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியிலும் பேட்டிங்கிற்கு பஞ்சமில்லை. அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோ ரூட், ஜோஸ் பட்லர் போன்ற அதிரடி வீரர்கள் உள்ள அந்த அணி பவுலிங்கில் தொய்வாக உள்ளது.

ஸ்பின்னை நம்பி..
அடில் ரஷித் மற்றும் மொயீன் அலி ஆகிய இரு ஸ்பின்னர்களை இங்கிலாந்து பெரிதும் நம்பியுள்ளது. திருப்பியடிக்க இங்கிலாந்தும், ஆதிக்கத்தை தொடர தென் ஆப்பிரிக்காவும் தயாராக இருப்பதால் இப்போட்டியில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications