
கடைசி 2 போட்டி
தனது உடல் தகுதியை மேம்படுத்துவதற்காக 7 கிலோ வரை உடை எடையை பிரித்வி ஷா குறைத்தார். இந்த நிலையில் சையது முஸ்தாக் அலி தொடரில் பிரித்வி ஷா தனது திறமையை மீண்டும் நிரூபித்து இருக்கிறார். முதல் போட்டியில் 34 பந்தில் 55 ரன்கள், 2வது டி20 போட்டியில் 12 பந்தில் 29 ரன்கள் என்ற விளாசிய பிரித்வி ஷா, தற்போது டி20 கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் சதத்தை பூர்த்தி செய்தார்.

19 பந்தில் அரைசதம்
ராஜ்காட்டில் நடைபெற்ற அசாம் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற அசாம் அணி முதலில் பந்துவீசியது. இதனையடுத்து பிரித்வி ஷா தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தார். 6 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் விளாசிய அவர் 19 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

46 பந்தில் சதம்
அத்துடன் பிரித்வி ஷா நிற்கவில்லை. என்னையா அணியில் சேர்க்கவில்லை என்று கோபத்தில் பந்தை பளார், பளார் என்று அடித்து நொறுக்கினார். இதன் காரணமாக மும்பை அணி 8.2 வது ஒவரில் 100 ரன்களையும், 12.3வது ஓவரில் 150 ரன்களையும் எட்டியது. தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் 46 பந்தில் சதத்தை பூர்த்தி செய்தார். அப்போது அவர் 6 சிக்சர் விளாசி இருந்தார்.

134 ரன்கள் விளாசல்
அடுத்த 15 பந்தில் பிரித்வி ஷா மேலும் 31 ரன்கள் சேர்த்தார். இதன் காரணமாக 61 பந்தில் 134 ரன்கள் என்று விளாசிய நிலையில் ஆட்டமிழந்தார். இதில் 13 பவுண்டரிகளும், 9 சிக்சர்களும் அடங்கும். இதன் காரணமாக மும்பை அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications











