Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஓவர் ஸீன்! மொக்கை டீம் கூட அடிச்சதுக்கே இப்படியா? இளம் வீரரை திட்டி சாபம் கொடுத்த ரசிகர்கள்!

Recommended Video

Prithvi Shaw smashes 63 off 39 balls in Syed Mushtaq Ali Trophy | பிரித்வி ஷா அதிரடி ஆட்டம்!

மும்பை : இளம் வீரர் ப்ரித்வி ஷா அசாம் அணிக்கு எதிரான டி20 போட்டியில் அரைசதம் அடித்த பின், செய்த செய்கைகளை கண்ட ரசிகர்கள் அவரை வசை பாடி வருகின்றனர்.

இளம் வீரர் ப்ரித்வி ஷா கடந்த சில மாதங்கள் முன்பு ஊக்கமருந்து உட்கொண்டதாக சர்ச்சையில் சிக்கி, தடை செய்யப்பட்டார்.

தடையில் இருந்து மீண்டு வந்த ப்ரித்வி ஷா, சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் மும்பை அணி சார்பாக பங்கேற்றார்.

அரைசதம்

அரைசதம்

அசாம் அணிக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்து தான் மீண்டும் கிரிக்கெட் ஆட வந்ததை சிறப்பாக அறிவித்தார். அப்போது பேட்டை உயர்த்திக் காட்டி, தன் பேட் தான் பேசும் என கொஞ்சம் ஓவராகவே சைகை காட்டினார். அது தான் விமர்சனத்தை சந்தித்து உள்ளது.

முதல் சதம்

முதல் சதம்

2018 ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடிய ப்ரித்வி ஷா, அடுத்து இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றார். தன் முதல் போட்டியிலேயே சதம் அடித்தார். அடுத்த சச்சின், சேவாக் என பலரும் அவரை புகழ்ந்து தள்ளினர்.

காயம் ஏற்பட்டது

காயம் ஏற்பட்டது

அடுத்த சில மாதங்கள் காயம் காரணமாக அணியில் இடம் பெற முடியாமல் தடுமாறிய ப்ரித்வி ஷா, பின் உள்ளுர் போட்டியில் பங்கேற்றார். அப்போது அவர் உட்கொண்ட இருமல் மருந்தில் இருந்த ஒரு தடை செய்யப்பட்ட ஒரு பொருளால், அவர் ஊக்க மருந்து சோதனையில் சிக்கியதாக கூறப்பட்டது.

தடை

தடை

அதன் பின் அவருக்கு எட்டு மாதங்கள் தடை விதிக்கப்பட்டது. தடையில் இருந்து மீண்டு வந்த அவர் சையது முஷ்டாக் அலி தொடரில் 39 பந்தில் 63 ரன்கள் குவித்தார்.

பேட் பேசும்

பேட் பேசும்

ஏழு ஃபோர், இரண்டு சிக்ஸ் அடித்து அதிரடி ஆட்டம் ஆடினார் ப்ரித்வி. தான் அரைசதம் அடித்த பின் பேட்டை உயர்த்திக் காட்டிய ப்ரித்வி ஷா, தன் பேட் தான் பேசும் என மீண்டும், மீண்டும் சைகை காட்டினார்.

தன்னம்பிக்கை

தன்னம்பிக்கை

அவர் தடையில் இருந்த போது அவரைக் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. அதற்கு பதில் அளிக்கும் வகையில் தான் அப்படி சைகை காட்டி இருந்தார். ஆனால், அசாம் போன்ற சிறிய அணிக்கு எதிராக அடித்த அரைசதத்துக்கு அது கொஞ்சம் அதிகப்படியான தன்னம்பிக்கையாக இருந்தது.

சாபம் கொடுத்த ரசிகர்

இதைக் கண்ட ரசிகர்கள் பலர் ட்விட்டரில் அவரை விளாசி இருக்கின்றனர். அதில் ஒருவர் சாபம் கொடுப்பது போல ப்ரித்வி ஷா சர்வதேச அரங்கில் நீண்ட நாட்கள் இருக்க மாட்டார் என கூறி உள்ளார்.

ஸீன் போடுகிறார்

ஸீன் போடுகிறார்

பலரும் அசாம் போன்ற வலு குறைந்த அணிக்கு எதிராக ஆடி அரைசதம் அடித்து விட்டு, இவர் ஓவராக ஸீன் போடுகிறார் என்று கூறி இருந்தனர்.

வினோத் காம்ப்ளி

வினோத் காம்ப்ளி

ஒருவர் இவரும் வினோத் காம்ப்ளி போல ஆகி விடுவார். இவருக்கு ஓவர் பில்டப் கொடுக்கப்படுகிறது. மிக மோசமான செய்கைகளை கொண்டுள்ளார் என விமர்சித்து இருக்கிறார் ஒரு ரசிகர்.

Story first published: Monday, November 18, 2019, 19:14 [IST]
Other articles published on Nov 18, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+