Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாய் பாபா.. நீ அனைத்தையும் பார்க்கிறாய் என நம்புகிறேன்.. அணியில் சேர்க்கப்படாத பிரித்வி ஷா உருக்கம்

மும்பை : நியூசிலாந்து மற்றும் வங்கதேசத்துக்கு எதிராக டி20 ,ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது.

இதற்காக சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக்குழுவினர் 4 அணிகளை அறிவித்துள்ளனர். இதில் நியூசிலாந்து தொடரில் சீனியர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் இதில் பிரித்வி ஷா, ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் சர்பிராஸ் கான் ஆகிய 3 வீரர்களும் சேர்க்கப்படவில்லை. இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிரித்வி ஷா அபாரம்

பிரித்வி ஷா அபாரம்

இதற்கு காரணம், இவ்விரு 3 வீரர்களும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக பிரித்வி ஷா தனது உடல் எடையை 7 கிலோ வரை குறைத்து, அதிரடியாக விளையாடி வருகிறார். டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 தொடரிலும் பிரித்வி ஷா சதம் விளாசினார்.

வாய்ப்பு மறுப்பு

வாய்ப்பு மறுப்பு

ஆனால், இந்திய அணியில் பிரித்வி ஷாவுக்கு ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் டி20 உலககோப்பையில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் , சீனியர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ள நியூசிலாந்து தொடரில் , பிரித்வி ஷாவை தேர்வுக்குழுவினர் சேர்க்கவில்லை.

பிரித்வி ஷா வேதனை

பிரித்வி ஷா வேதனை

இதனால் மனம் உடைந்த பிரித்வி ஷா, தனது சமூக வலைத்தள பக்கத்தில் உருக்கமாக பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் சாய் பாபாவின் புகைப்படத்தை போட்டுள்ள பிரித்வி ஷா, சாய் பாபா, நீ நடைபெறும் அனைத்தையும் பார்க்கிறேன் என நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

சேத்தன் சர்மா விளக்கம்

சேத்தன் சர்மா விளக்கம்

இதனிடையே, பிரித்வி ஷாவுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து பேசிய சேத்தன் சர்மா, பிரித்வி ஷாவுக்கு விரைவில் இந்திய அயில் வாய்ப்பு வழங்கப்படும் . ஷர்பிராஸ் கானை பொறுத்தவரை, அவர் இந்திய அணியில் இடம்பெற நல்ல போட்டியாளர் தான். ஆனால் தற்போது அணியில் இடமில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Monday, October 31, 2022, 21:48 [IST]
Other articles published on Oct 31, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+