Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

செம ட்விஸ்ட்.. புஜாராவுக்கு அனுப்பப்பட்ட "ஷாக்" தகவல்.. யாரும் எதிர்பார்க்காத "அதிரடி" மாற்றம்

லண்டன்: காயம் அடைந்திருக்கும் ஷுப்மன் கில்லுக்கு பதிலாகவே ப்ரித்வி ஷா இங்கிலாந்துக்கு அழைக்கப்படலாம் என்று பலரும் நினைத்திருக்க, அங்கே ட்விஸ்ட்டை வைத்துள்ளது இந்திய அணி.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தோல்விக்கு பிறகு, இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை எதிர்நோக்கியுள்ளது.

5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4ம் தேதி முதல் செப்டம்பர் 14ம் தேதி வரை நடைபெறுகிறது.

 அல்மோஸ்ட் உறுதி

அல்மோஸ்ட் உறுதி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஏற்பட்ட தோல்வி காரணமாக, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில், வெற்றிப் பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது இந்திய கிரிக்கெட் அணி. இந்நிலையில், இந்திய அணியின் ஓப்பனிங் வீரர் ஷுப்மன் கில் காயம் காரணமாக இங்கிலாந்து தொடரில் இருந்து விலகுவது அல்மோஸ்ட் உறுதியாகிவிட்டது. அவர் விரைவில் நாடு திரும்ப இருப்பதாக தெரிகிறது. இதனால், ரோஹித் ஷர்மாவுடன் ஓப்பனிங் இறங்க ப்ரித்வி ஷாவை அழைக்க, இந்திய அணி நிர்வாகம் ஏற்பாடு செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 இங்கிலாந்துக்கு டிக்கெட்

இங்கிலாந்துக்கு டிக்கெட்

ப்ரித்வி ஷா இப்போது இலங்கையில் இருக்கிறார். அந்நாட்டு அணிக்கு எதிரான 3 டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக அவர் இந்திய 'ஏ' அணியில் இடம் பெற்றுள்ளார். இந்த நிலையில் தான், ஷுப்மன் கில் காயம் காரணமாக வெளியேற, ப்ரித்வி ஷாவுக்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது. ப்ரித்வி ஷாவை இலங்கையில் இருந்து உடனடியாக இங்கிலாந்து அழைக்க, பிசிசிஐக்கு முறைப்படி இந்திய அணி கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 புஜாராவுக்கு பதில்

புஜாராவுக்கு பதில்

இந்நிலையில், திடீர் மாற்றமாக, ப்ரித்வி ஷா இங்கிலாந்துக்கு அழைக்கப்படுவதன் முக்கிய காரணம், ஓப்பனிங் வீரராக களமிறங்குவதற்கு அல்ல. மாறாக, அவரை புஜாராவுக்கு பதிலாக மிடில் ஆர்டரில் களமிறங்க வைக்க ஆலோசனைகள் நடந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. உண்மையில் இது ரசிகர்களே எதிர்பார்க்காத ட்விஸ்ட் எனலாம். ஏனெனில், ப்ரித்வி ஷாவின் வழக்கமான ஸ்லாட் ஓப்பனிங் தான். அதற்கேற்ப, ஷுப்மன் கில் காயத்தில் சிக்க, ப்ரித்வி ஷாவுக்கு அடிச்சது யோகம் என்று எண்ணப்பட்டது. ஆனால், ஷுப்மன் கில்லே அணியில் இருந்தாலும், ப்ரித்வி இங்கிலாந்து அழைக்கப்பட்டிருப்பார் என்பது இப்போது தான் தெரிய வருகிறது.

 ஒரே அலைவரிசை

ஒரே அலைவரிசை

ஆனால், இதில் உண்மையில் அதிர்ச்சியில் இருப்பது புஜாரா தான். கடந்த இரு ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் அவரால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. 2020ம் ஆண்டு தொடக்கத்தில் நியூசிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடர், ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் என்று அவர் தொடர்ந்து சொதப்பி இருப்பதால், அவருக்கு பதில் ப்ரித்வி ஷாவை களமிறக்கலாம் என்பதே கோலி அன்ட் கோ-வின் பிளான் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த சிக்னலும் புஜாராவுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாம். அதுமட்டுமில்ல, ஆஸ்திரேலிய முன்னாள் ஸ்பின்னர் பிராட் ஹாகும் இதே கருத்தை தான் வலியுறுத்தி இருக்கிறார். ப்ரித்வி ஷாவை புஜாராவுக்கு பதிலாக சேர்க்கலாம் என்று அவரும் இந்திய அணியின் ஒரே Frequency-யில் யோசித்திருக்கிறார்.

Story first published: Saturday, July 3, 2021, 19:50 [IST]
Other articles published on Jul 3, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+