Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பயிற்சி பயிற்சின்னு ப்ரித்வி ஷா காலை உடைச்சுட்டீங்களே!! முதல் டெஸ்டில் ப்ரித்வி ஷா இல்லை!!

சிட்னி : இந்திய டெஸ்ட் அணியின் துவக்க வீரர் ப்ரித்வி ஷா ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் காயம் காரணமாக பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் வரும் 2ஆம் தேதி முதல் இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் துவங்க உள்ளது.

அதற்கு முன்னதாக நடந்த பயிற்சிப் போட்டியில் இளம் வீரர் ப்ரித்வி ஷாவுக்கு இடது கணுக்காலில் ஏற்பட்டுள்ளது.

இந்தியா பந்துவீச்சு

இந்தியா பந்துவீச்சு

இந்தியா - கிரிக்கெட் ஆஸ்திரேலியா அணிக்கு இடையே டெஸ்ட் தொடருக்கு இந்திய வீரர்கள் தயாராகும் வகையில் பயிற்சிப் போட்டி நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்க்ஸில் இந்தியா பேட்டிங் செய்து முடித்து விட்டு தற்போது பந்து வீசி வருகிறது.

கேட்ச் பிடிக்க முயற்சி

கேட்ச் பிடிக்க முயற்சி

ப்ரித்வி ஷா பீல்டிங் செய்து கொண்டு இருந்த போது மாக்ஸ் பிரையன்ட் என்ற வீரர் உயரே அடித்த பந்தை பவுண்டரி கோட்டுக்கு அருகே பிடிக்க முயற்சி செய்தார் ப்ரித்வி. அப்போது பவுண்டரி எல்லையை தாண்டாமல் இருக்க வேண்டி காலை மடக்கிய போது கணுக்காலில் உள்காயம் ஏற்பட்டது.

காயம் உறுதி ஆனது

காயம் உறுதி ஆனது

வலி பொறுக்க முடியமால் ப்ரித்வி ஷா மைதானத்திலேயே அமர்ந்து விட்டார். இந்திய அணியின் பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் அவரை பரிசோதித்து, பின்னர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கே உள்காயம் ஏற்பட்டு இருப்பது உறுதியாகி உள்ளது. திரும்பி வரும்போது காலில் க்ரட்ச் அணிந்து வந்தார் ப்ரித்வி. இதையடுத்து அவரது காயம் குணமாக சில நாட்கள் ஆகலாம் என கருதப்படுகிறது.

அறிவிப்பு வெளியானது

பிசிசிஐ தனது அறிவிப்பில் முதல் டெஸ்ட் போட்டியில் ப்ரித்வி ஷா ஆடமாட்டார் என தெரிவித்துள்ளது. இதனால் தற்போது துவக்க வீரராக யாரை ஆடவைப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ப்ரித்வி ஷா அரைசதம்

ப்ரித்வி ஷா அரைசதம்

நான்கு நாள் பயிற்சி போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 358 ரன்கள் எடுத்தது. அதில் ப்ரித்வி ஷா உட்பட ஐந்து இந்திய வீரர்கள் அரைசதம் அடித்து இருந்தனர். ப்ரித்வி ஷா அரைசதம் அடித்த போது அனைவரும் பாராட்டி தள்ளினர்.

குணமாகி விடுவாரா?

குணமாகி விடுவாரா?

இது போன்ற பயிற்சிப் போட்டிகளில் வீரர்கள் பீல்டிங் செய்யும் போது அதிரடி முயற்சிகள் செய்யாமல் இருப்பதே நல்லது. எனினும், இளம் வீரர் ப்ரித்வி கஷ்டமான கேட்ச்சை பிடிக்க முயற்சி செய்து காயம் ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இப்போது இந்த இளம் வீரர் முதல் டெஸ்ட் போட்டியில் ஆடும் வாய்ப்ப்பை இழந்துள்ளார். அடுத்த, டெஸ்ட் போட்டிகளுக்கு முன் காயத்தில் இருந்து குணமாகி விடுவாரா என உறுதியாக கூற முடியாத நிலை உள்ளது.

அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம்

அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம்

ப்ரித்வி ஷா வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அருமையாக ஆடினார். தன் முதல் அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து அசத்தினார். அடுத்து ஒரு அரைசதம் அடித்தார். 3 இன்னிங்க்ஸ்களில் 237 ரன்கள் எடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருந்தார். இந்த பயிற்சிப் போட்டியிலும் 69 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து இருந்தார் ப்ரித்வி. இருந்தும், காயத்தால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வாய்ப்பை இழந்துள்ளார்.

Story first published: Friday, November 30, 2018, 11:38 [IST]
Other articles published on Nov 30, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+