Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹார்ட்டீனுடன் கூடிய நெருங்கிய பதிவு.. பிரித்வி ஷாவின் காதலி போட்ட இன்ஸ்டா ஸ்டோரி.. ரசிகர்கள் குஷி!

மும்பை: இந்திய கிரிக்கெட் வீரருக்காக பிரித்வி ஷாவின் காதலி போட்டுள்ள இன்ஸ்டாகிராம் போஸ்ட் வைரலாகி வருகிறது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

முதல் ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பிரித்வியின் அதிரடி

பிரித்வியின் அதிரடி

இந்திய அணியின் வெற்றிக்கு பிரித்வி ஷா முக்கிய காரணமாக பார்க்கப்பட்டார். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 262 ரன்களை எடுத்தது. இதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் பிரித்வி ஷா எதிரணி பவுலர்களை திக்கு முக்காட வைத்தார். அவர் காட்டிய அதிரடியில் இது ஒருநாள் போட்டியா அல்லது டி20 போட்டியா என ரசிகர்கள் ட்ரோல் செய்யும் அளவிற்கு சென்றுவிட்டனர்.

ஆட்ட நாயகன் விருது

ஆட்ட நாயகன் விருது

ஷிகர் தவானை ஸ்ட்ரைக்கிற்கே வரவிடாதவாறு பவுண்டரிகளை விரட்டி வந்த ப்ரித்வி ஷா 24 பந்துகளில் 43 ரன்களை விளாசினார். இதில் 9 பவுண்டரிகள் அடங்கும். இதன் காரணமாக அவருக்கு ஆட்ட நாயகன் விருதும் வழங்கப்பட்டது. பிரித்விக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வந்த நிலையில் அவரின் காதலி என்று கூறப்பட்டு வரும் நடிகை ப்ராச்சி சிங் மிகவும் நெருக்கமான வாழ்த்து ஒன்றை கூறியுள்ளார்.

இன்ஸ்டா பதிவு

இன்ஸ்டா பதிவு

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி போட்டுள்ள ப்ராச்சி சிங், பிரித்வி ஷாவின் ஸ்கோர் விவரங்களை பதிவிட்டு, 'தி பெஸ்ட்' எனக்குறிப்பிட்டுள்ளார். இதுமட்டுமல்லாமல் ஒரு ஹார்ட்டீன் எமோஜியையும் அதில் அவர் இணைத்துள்ளார். இதுமட்டுமல்லாமல் பிரித்வி ஷா ஆட்ட நாயகன் விருது வாங்கும் புகைப்படத்தை போட்டும் ஹார்ட்டின் எமோஜியை பறக்கவிட்டுள்ளார்.

ஒப்புக்கொள்ளவில்லை

ஒப்புக்கொள்ளவில்லை

பிரித்வி ஷாவும் - நடிகை ப்ராத்தி சிங்கும் ரகசியமாக காதலித்து வருவதாக கடந்த ஓராண்டுக்கு மேலாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இதற்கேற்றார் போல அவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராம் பதிவுகளை போட்டு வருகின்றனர். எனினும் இன்னும் அவர்கள் தங்களது காதலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, July 21, 2021, 0:44 [IST]
Other articles published on Jul 21, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+