Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எகிறி குதித்து... ஒருகையால கேட்ச் பிடித்து அசத்திய இளம்வீரர்... பாராட்டுக்கு பஞ்சமில்லாத அதிரடி!

சிட்னி : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கிடையில் சிட்னியில் பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது.

இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 9 விக்கெட்டுகளை இழந்து 247 ரன்களுக்கு ஆட்டத்தை டிக்ளேர் செய்தது.

Prithvi Shaws Unbelievable Grab To Dismiss Tim Paine In Practice Match

தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியின் இரண்டாவது நாள் ஆட்டத்தின்போது, ஒற்றை கைகளால் எகிறி குதித்து அணியின் துவக்க வீரர் பிரித்வி ஷா பிடித்த கேட்ச் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கிடையில் சிட்னியில் பயிற்சி ஆட்டம் நடைபெற்றுவரும் நிலையில், இந்த போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பாக ஆடினர். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 247 ரன்களில் 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் ஆட்டத்தை டிக்ளேர் செய்தனர். அஜிங்க்யா ரஹானே சதமடித்தார்.

இதையடுத்து ஆஸ்திரேலியா ஏ அணி இரண்டாவது நாளான இன்று களமிறங்கியது. டிம் பெய்ன் சிறப்பாக விளையாடிய நிலையில், உமேஷ் யாதவின் பந்தை எதிர்கொண்ட அவர், அடித்து ஆட அது நேரடியாக பிரித்வி ஷா கைகளுக்கு சென்றது. தலைக்கு மேல் சென்ற அந்த பந்தை எகிறி குதித்து ஒற்றை கையால் பிடித்தார் ஷா. துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அவர், டக் அவுட் ஆன நிலையில் இந்த அவரது முயற்சி அவருக்கு பாராட்டுக்களை பெற்று தந்துள்ளது.

Story first published: Monday, December 7, 2020, 18:04 [IST]
Other articles published on Dec 7, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+