For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரொம்ப ஏமாற்றமா இருக்கு.. இவ்வளவு ரன் அடிச்சும்.. அணியில் சேர்க்கல..தொடக்க வீரர் பிரித்வி ஷா விரக்தி

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் தாம் தேர்வு செய்யப்படாதது மிகவும் ஏமாற்றம் அளிப்பதாக நட்சத்திர கிரிக்கெட் வீரர் பிரித்விஷா தெரிவித்துள்ளார்.

பிரித்வி ஷா உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து வருகிறார்.

இதேபோன்று இந்திய ஏ அணி தொடரில் விளையாடிய அவர் சேவாக் போன்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.

77 பந்துகளில் 205 ரன்கள்.. கிரிக்கெட் உலகையே அதிரவைத்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்.. டி20ல் புது சாதனை! 77 பந்துகளில் 205 ரன்கள்.. கிரிக்கெட் உலகையே அதிரவைத்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்.. டி20ல் புது சாதனை!

விரக்தி

விரக்தி

இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் ருத்துராஜ் கெய்க்வாட் , சுப்மான் கில், இஷான் கிஷன் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால் பிரித்வி ஷா நீக்கப்பட்டார். சீனியர் அணி டி20 உலக கோப்பைக்காக ஆஸ்திரேலிய சென்று உள்ள நிலையில் இரண்டாம் பட்ச அணியில் கூட தமக்கு இடம் கிடைக்கவில்லை என்று பிரித்விஷா தற்போது விரக்தியில் இருக்கிறார்.

ஏமாற்றம் அளிக்கிறது

ஏமாற்றம் அளிக்கிறது

பிரித்வி ஷா தற்போது சையது முஸ்தாக் அலி தொடருக்காக தயாராகி வருகிறார். இந்த நிலையில் செய்தியாளரிடம் பேசிய அவர் இந்திய அணியில் தேர்வு செய்யப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. நான் ரன்களை குவித்து வருகிறேன், கடின பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். ஆனால் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இருந்தாலும் பரவாயில்லை தேர்வு குழுவினர்.

எடை குறைத்தேன்

எடை குறைத்தேன்

நான் எப்போது தயாராக இருக்கிறேன் என்று நினைக்கிறார்களோ அப்போது எனக்கு வாய்ப்பு வழங்குவார்கள். கிடைக்கும் வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொண்டு இந்திய ஏ அணி இல்லை மற்ற அணிகளோ எதுவாக இருந்தாலும் நான் என் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்துவேன். தற்போது எனது உடல் தகுதியை நான் மேம்படுத்தி இருக்கிறேன். எந்த மாற்றமும் செய்யவில்லை.ஆனால் தற்போது உடற்பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறேன்.

7 கிலோ குறைத்தேன்

7 கிலோ குறைத்தேன்

கடந்த ஐபிஎல் தொடருக்கு பிறகு நான் ஏழு எட்டு கிலோ எடையை குறைத்து இருக்கிறேன். இப்போதெல்லாம் உடற்பயிற்சி கூடத்தில் தான் அதிக நேரம் செலவழிக்கிறேன். அதிக நேரம் ஓடுகிறேன். இனிப்பு மற்றும் கூல் ட்ரிங்க்ஸ் என எதையும் சாப்பிடுவதில்லை. சீன உணவுகளை நான் இப்போது சேர்த்துக் கொள்வதில்லை என்று பிரித்விஷா குறிப்பிட்டுள்ளார். பிரத்விஷா துலிப் கோப்பையில் இரண்டு சதம் அடித்த நிலையில் இந்திய ஏ அணிக்காக நியூஸ்லாந்துக்கு எதிராக 77 ரன்களை விளாசிது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, October 8, 2022, 13:57 [IST]
Other articles published on Oct 8, 2022
English summary
Prithvi shaw says he was disappointed for not getting chance
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X