Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐயோ பாவம்.. நட்சத்திரங்களுக்கும் இப்படி ஒரு காதல் தோல்வியா? கவலையில் ஆழ்ந்த பிரித்வி ஷா.. என்ன ஆனது

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் பிரித்வி ஷா தனது காதலி குறித்து போட்டுள்ள மறைமுக இன்ஸ்டா பதிவு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அவருக்கு நேரமே சரியில்லை என ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக ருத்ர தாண்டவம் ஆடியவர் பிரித்வி ஷா. அவரின் ஸ்ட்ரைக் ரேட்டை பார்த்து இந்தியாவின் எதிர்கால சேவாக் என்றெல்லாம் புகழ்ந்தனர்.

ஆனால் கடந்த சில மாதங்களாகவே அவருக்கு மிகவும் மோசமான காலமாக இருந்து வருகிறது. ஊக்கமருந்து பிரச்சினையில் சிக்கிய பிரித்வி ஷா அதன் பின்னர் உடல் எடை அதிகம் எனக்கூறி இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டார்.

பிரித்வி கம்பேக்

பிரித்வி கம்பேக்

அனைத்து சவால்களையும் மீறி ரஞ்சிக்கோப்பையில் சிறப்பாக செயல்பட்டதால் சமீபத்தில் நடந்த நியூசிலாந்து தொடரில் வாய்ப்பு கிடைத்தது. எனினும் ப்ளேயிங் 11ல் இடம் பெறவில்லை. ஆனால் தற்போது மீண்டும் கெட்ட காலம் அவரை சூழ்ந்துள்ளது. சமீபத்தில் பிரபல இன்ஸ்டாகிராம் புகழ் சப்னா கில்லுக்கும் பிரித்விக்கும் இடையே பிரச்சினை வெடித்தது.

 என்ன சர்ச்சை

என்ன சர்ச்சை

தன்னை ஹாக்கி பேட்டால் தாக்க வந்ததாக சப்னா கில் மீது பிரித்வி போலீஸ் புகார் கொடுத்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரித்வி தான் மதுபோதையில் ஆக்ரோஷமாக நடந்துக்கொண்டதாக வழக்கு போட்டார். இதுகுறித்த வழக்கே இன்னும் நிலுவையில் உள்ள சூழலில் காதலிலும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் பதிவு

இன்ஸ்டாகிராம் பதிவு

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி போட்டுள்ள அவர், சில பேர் உங்களை பயன்படுத்திக்கொள்வதற்காக காதலிக்கிறேன் (லவ் யூ) என்று கூறி உடன் இருப்பார்கள். அவர்களுக்கான தேவைகள் முடிந்த பிறகு, இனி நம்மால் எந்த பயனுமில்லை எனத்தெரிந்தவுடன் விட்டு சென்றுவிடுவார்கள் என வேதனையுடன் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் அவருக்கு காதல் தோல்வி ஏற்பட்டுள்ளது உறுதியாகிறது.

காதலியின் விவரங்கள்

காதலியின் விவரங்கள்

பிரித்வி ஷாவும், நிதி தபாடியா என்ற நடிகையும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இவர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் அடிக்கடி இணையத்தில் வெளிவரும். தற்போது ஏற்பட்டுள்ள மனக்கசப்பால் பிரிந்திருப்பதாக தெரிகிறது.கிரிக்கெட்டிலும் வாய்ப்பில்லை, காதலிலும் தோல்வி என கவலையில் இருக்கும் பிரித்விக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

Story first published: Thursday, March 9, 2023, 18:14 [IST]
Other articles published on Mar 9, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+