Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சின் போல் வர வேண்டியவர் பிரித்வி ஷா! கோலியை பார்த்து திருந்தனும்.. ஹர்பஜன் சிங் அறிவுரை

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் திறமை வாய்ந்த இளம் வீரராக வந்து சர்வதேச கிரிக்கெட்டிலும் அபாரமான தொடக்கத்தை பெற்று தற்போது காணாமல் போகிருக்கும் பிரித்வி ஷாவை மீண்டும் பழைய பன்னீர்செல்வம் ஆக வரவேண்டும் என்று பல முன்னாள் வீரர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள்.

ஆனால் பிரித்விஷா தன் உடல் தகுதியில் ஆர்வம் காட்டுவதில்லை. தற்போது கூட சையது முஸ்தாக் அலி தொடரில் அடுத்தடுத்து டக்அவுட் ஆகி வருகிறார். இந்த நிலையில் பிரித்விஷாவை புகழ்ந்து பேசி இருக்கும் ஹர்பஜன் அவர் மீண்டு வரவேண்டும் என்று அறிவுரை வழங்கியிருக்கிறார்.

prithvi shaw smat 2024 ipl 2025

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், பிரித்வி ஷா பொருத்தவரை என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அவர் இதுவரை என்ன செய்தார் என்றும் எனக்கு தெரியாது. எனினும் பிரித்விஷா தன்னையே சுய பரிசோதனை செய்து கொண்டு தனது கிரிக்கெட் வாழ்க்கையை எப்படி மேல் நோக்கி செல்ல வேண்டும் என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும்.

இது போன்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் அதிலிருந்து மீண்டு வருவார் இல்லை என்றால் அப்படியே காணாமல் போய்விடுவார். இதில் எந்த முடிவை எடுக்க வேண்டும் என்பதை பிரித்விஷா தான் தேர்வு செய்ய வேண்டும். ஐபிஎல் ஏலத்தில் விலை போகவில்லை என்றால் அதனை எந்த வீரராகும் ஜீரணிக்க முடியாது. பிரித்வி ஷாவை பல கிரிக்கெட் விமர்சகர்களும் சச்சின் டெண்டுல்கர் போல் திறமையானவர் என்று பாராட்டினார்கள்.

ஆனால் இதை நான் ஒரு பிரச்சினையாக நினைக்கின்றேன். இளம் வயதில் சச்சின் போன்ற ஜாம்பவானை ஒப்பிட்டு பேசினால் அது நிச்சயம் தேவை இல்லாத அழுத்தத்தை பிரித்விஷாவுக்கு கொடுத்திருக்கும். ஆனால் பிரித்விஷா விஷயத்தில் கிரிக்கெட் மட்டும் பிரச்சனை இல்லை. பல விஷயங்கள் இருக்கின்றது. நான் அவர் மீண்டும் வரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

இந்த பின்னடைவுளிருந்து அவர் தகர்த்து எறிந்து ஜொலிக்க வேண்டும். உடல் தகுதியில் கடுமையாக கவனம் செலுத்த வேண்டும். பிரித்விஷா ஒரு இளம் வீரர் 24, 25 வயது தான் ஆகிறது என நினைக்கின்றேன். அவர் இன்னும் நிறைய ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடலாம். அதற்கு முதலில் உடல் தகுதியில் கவனம் செலுத்த வேண்டும்.நான் பார்த்த பிரித்வி ஷாக்கும் தற்போது நாம் பார்க்கும் பிரித்விஷாவுக்குமே நிறைய வித்தியாசம் இருக்கிறது.

உடலும் பருமனாக மாறிவிட்டது. இதன் மூலம் அவர் தன்னுடைய உடல் தகுதியை கண்டுகொள்ளவில்லை என தெரிகிறது. தற்போது இந்திய வீரர்களின் உடல் தகுதியை பாருங்கள். அது மைதானத்திலும் எதிரொலிக்கிறது. பிரித்விஷா யாரையாவது ரோல் மாடலாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் விராட் கோலியை பார்த்து பின்பற்றட்டும்.பிரித்விஷா இனி நல்லதையே செய்யட்டும். இதன் மூலம் அடுத்து வரும் கிரிக்கெட் வீரர்கள் பிரித்விஷாவை பார்த்து கற்றுக் கொள்வார்கள் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

Story first published: Tuesday, December 3, 2024, 22:39 [IST]
Other articles published on Dec 3, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+