For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யாரை ஓரம் கட்டுனீங்க? 34 பவுண்டரி, 5 சிக்ஸ்..227 நாட் அவுட்.. கோலிக்கு தரமான பதிலடி தந்த இளம் வீரர்

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் புறக்கணிக்கப்பட்ட இளம் வீரர் தற்போது முதல் தர போட்டிகளில் சிறப்பாக ஆடி வருகிறார்.

இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் இரவு பகல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சிறப்பாக ஆடி வருகிறது. பிங்க் பாலை வைத்து நேற்று இங்கிலாந்து அணிக்கு இந்தியா கடும் நெருக்கடி கொடுத்தது.

ஏலம் முடிந்து 3 நாட்களுக்கு பின்.. ஐபிஎல் தொடரில் திருப்பம்.. 2 அணிகள் எடுத்த முடிவால் பரபரப்பு! ஏலம் முடிந்து 3 நாட்களுக்கு பின்.. ஐபிஎல் தொடரில் திருப்பம்.. 2 அணிகள் எடுத்த முடிவால் பரபரப்பு!

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 112 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 99 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளது.

எப்படி

எப்படி

இங்கிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் புறக்கணிக்கப்பட்ட ப்ரித்வி ஷா வீரர் தற்போது முதல் தர போட்டிகளில் சிறப்பாக ஆடி வருகிறார். இவர் விஜய் ஹசாரே கோப்பை தொடரில் மும்பை அணிக்காக ஆடி வருகிறார். முதல் போட்டியில் 50 ரன்கள் அடித்த இவர் தற்போது நடக்கும் போட்டியிலும் கலக்கி வருகிறார்.

பாண்டிச்சேரி

பாண்டிச்சேரி

பாண்டிச்சேரிக்கு எதிராக இன்று மும்பை அணி ஆடிய போட்டியில் மிகவும் அதிரடியாக ஆடி ப்ரித்வி ஷா 227 ரன்கள் எடுத்துள்ளார். கடைசி வரை அவுட்டாகாமல் இருந்து இவர் அதிரடி காட்டி இருக்கிறார். முதல் தர போட்டிகளில் இன்று இவர் ஆடிய ஆட்டம் தேர்வுக்குழுவை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

ப்ரித்வி ஷா

ப்ரித்வி ஷா

இன்று இவர் 31 பவுண்டரி, 5 சிக்ஸ் அடித்து அசத்தி இருக்கிறார். இவரின் இந்த பேட்டிங் பெரிய அளவில் வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இவர் சரியாக ஆடவில்லை. கிடைத்த வாய்ப்பை இவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.

அதிரடி

அதிரடி

இதனால் இவருக்கு பதிலாக அணிக்குள் கில் எடுக்கப்பட்டார். இந்த நிலையில் எனக்கு திறமை இருக்கிறது என்று ப்ரித்வி ஷா நிரூபித்து இருக்கிறார். இந்திய அணிக்குள் மீண்டும் நுழைய வேண்டும் என்ற ஆர்வத்தில் இவர் அதிரடி காட்ட தொடங்கி உள்ளார். ஆனால் ப்ரித்வி ஷா மீண்டும் அணிக்குள் வருவது இயலாத காரியம் என்று கூறப்படுகிறது.

Story first published: Thursday, February 25, 2021, 16:39 [IST]
Other articles published on Feb 25, 2021
English summary
Prithvi Shaw smashes an unbeaten 227 in the Vijay Hazare Trophy for Mumbai.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X