Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னங்க இவர் அடங்க மாட்டேங்கறாரு... இளம் வீரரின் அதிரடி 4வது சதம்... மிகச்சிறப்பு!

டெல்லி : விஜய் ஹசாரே கோப்பை தொடர் தற்போது அரையிறுதியை எட்டியுள்ளது. இன்றைய போட்டியில் மும்பை மற்றும் கர்நாடகா அணிகள் மோதி வருகின்றன.

தற்போது மும்பை அணி தனது பேட்டிங்கை ஆடி கர்நாடகாவிற்கு 323 ரன்களை இலக்காக கொடுத்துள்ளது.

மும்பை அணியின் கேப்டன் 122 பந்துகளில் அதிரடியாக விளையாடி 165 ரன்களை குவித்துள்ளார். அவர் இந்த தொடரில் அடித்துள்ள நான்காவது சதம் இது.

அரையிறுதிப் போட்டி

அரையிறுதிப் போட்டி

விஜய் ஹசாரே கோப்பை தொடர்ந்து துவங்கி நடைபெற்று தற்போது அரையிறுதியை எட்டியுள்ளது. இந்த தொடரில் துவக்கம் முதலே மும்பை அணி மற்றும் அணியின் கேப்டன் பிரித்வி ஷா சிறப்பாக விளையாடி வருகின்றனர். இதுவரை 7 போட்டிகளில் விளையாடி பிரித்வி ஷா 754 ரன்களை குவித்துள்ளார்.

4வது சதம்

4வது சதம்

இந்த ரன் குவிப்பில் இரட்டை சதம் ஒன்று மற்றும் 3 சதங்கள் அடக்கம். 185.5 சராசரியில் 134.88 ஸ்டிரைக் ரேட்டில் அவர் இந்த ரன்களை குவித்துள்ளார். கடந்த காலிறுதிப் போட்டியில் அவுட்டாகாமல் 185 ரன்களை குவித்துள்ள அவர் தற்போது அரையிறுதியில் 165 ரன்களை குவித்துள்ளார்.

மயங்கின் சாதனை முறியடிப்பு

மயங்கின் சாதனை முறியடிப்பு

ஒருநாள் போட்டித் தொடரான இந்த தொடரின் போட்டிகளில் டி20 போல அவர் குறைவான பந்துகளில் அதிகமான ஸ்கோர்களை அடித்து துவம்சம் செய்து வருகிறார். இந்த தொடரில் அவர் இதுவரை 754 ரன்களை குவித்துள்ள நிலையில் முன்னதாக விஜய் ஹசாரே 2018 தொடரில் 723 ரன்களை அடித்த மயங்க் அகர்வாலின் சாதனையை முறியடித்துள்ளார்.

2021 தொடரின் முதல் வீரர்

2021 தொடரின் முதல் வீரர்

இந்த தொடரில் இதுவரை 700 ரன்களை அடித்துள்ள முதல் வீரர் என்ற பெருமையும் பிரித்விக்கு கிடைத்துள்ளது. மேலும் தான் கேப்டன் பொறுப்பை ஏற்று விளையாடிய 3 போட்டிகளிலும் இரட்டை சதம் மற்றும் அடுத்தடுத்த சதங்கள் என்று கலக்கலான பேட்டிங்கை தந்துள்ளார் பிரித்வி ஷா.

Story first published: Thursday, March 11, 2021, 16:20 [IST]
Other articles published on Mar 11, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+