Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

537 நாட்களுக்கு பிறகு இந்திய அணியில் சேர்ப்பு.. முதல் முறையாக மனம் திறந்த பிரித்வி ஷா

மும்பை : அண்டர் 19 அணியின் கேப்டனாக இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரராக களம் இறங்கி அசத்தியவர் பிரித்வி ஷா.

காயம் காரணமாக வாய்ப்பை இழந்த பிரித்வி ஷா பிறகு சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்திய அணிக்கு திரும்பினார்.

பிரித்வி ஷா கடைசியாக ஜூலை 2021 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடினார். அதன் பிறகு 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டிகளில் தான் பிரித்வி ஷா சேர்க்கப்பட்டார்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

எனினும் அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. பிரித்வி ஷா சையது முஸ்தாக் அலி தொடரில் கடந்த ஆண்டு 363 ரன்கள் அடித்தார். இதேபோன்று ரஞ்சி கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் 379 ரன்கள் விளாசி தன்னுடைய திறமையை பிரித்வி ஷா நிரூபித்தார். இது குறித்து செய்தியாளர்களுடன் பேசிய பிரித்வி ஷா இந்திய அணியில் இடம் பிடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

கவலை இல்லை

கவலை இல்லை

வீரர்களுடன் இணைந்து பயிற்சி செய்தேன். அந்த தருணத்தை நான் மிகவும் அனுபவித்தேன். எனினும் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அது கவலை இல்லை. இந்திய அணிக்கு திரும்பிவிட்டேன் என்பதுதான் மிகவும் முக்கியமான விஷயம். வீரர் அணியில் இடம் பிடிப்பது அனைத்தும் தேர்வு குழுவினர் கையில் உள்ளது. அவர்கள் தான் ஒரு வீரர் எப்போது தேவை எப்போது தேவையில்லை என்பதை முடிவு செய்வார்கள்.

 குறிக்கோள்

குறிக்கோள்

அவர்களுடைய முடிவுக்கு நான் எப்போதும் மரியாதை தருகிறேன். சில வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்க அவர்கள் முடிவெடுப்பார்கள். அது அவர்களுடைய முடிவு. அது குறித்து என்னால் ஒன்றும் செய்ய முடியாது. நான் தொடர்ந்து இந்திய அணியில் இடம் பிடிப்பதற்கு முயற்சி செய்து வருகிறேன். நான் அடைய பல குறிக்கோள் வைத்திருக்கிறேன். அதனை இந்திய அணியில் இடம் பிடித்து நான் அடைவேன். நான் ரஞ்சி கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடி கொண்டு இருந்தேன்.

 மிகவும் பாதித்தது

மிகவும் பாதித்தது

ஆனால் அணியில் எனக்கு இடம் கிடைக்காததால் நாம் அடித்த ஸ்கோர் பத்தாது என்பதை நினைத்து .இன்னும் அதிகமாக ரன் அடிக்க வேண்டும் என முயற்சி செய்தேன். அதன் பிறகு தான் 379 ரன்களை விளாசினேன். அன்று விளையாடிய போது அது என்னுடைய நாளாக தெரிந்தது. இதனால் எனக்கு கிடைத்த வாய்ப்பை நாம் வீணடிக்க கூடாது என்று நினைத்து தொடர்ந்து ரன் சேர்க்க முயற்சித்தேன். நாம் இவ்வளவு கடின உழைப்பு போட்டும் இந்திய அணில் இடம்பெற முடியவில்லை என்ற ஏக்கம் என்னை மிகவும் பாதித்தது. எனினும் இது தாமதமான முடிவு கிடையாது என்றும் பிரித்வி ஷா கூறியுள்ளார்.

Story first published: Monday, March 6, 2023, 13:24 [IST]
Other articles published on Mar 6, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+