Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எந்த வம்பிற்கும் போவதில்லை.. என் கிரிக்கெட்டையும், குடும்பத்தையும் பார்க்கிறேன்- பிரித்வி ஷா ஓபன்டாக்

மும்பை:இந்திய கிரிக்கெட் அணியில் வாய்ப்புக்காக போராடி வரும் 26 வயதான பிரித்வி ஷா, தனது ஆட்டம், குடும்பம் மற்றும் கடின உழைப்பில் முழு கவனம் செலுத்தி வருகிறார். ஒரு காலத்தில் இந்தியக் கிரிக்கெட்டின் நம்பிக்கைக்குரிய வீரராகக் கருதப்பட்ட ஷா, கடந்த சில ஆண்டுகளாகப் பல பின்னடைவுகளைச் சந்தித்தார்.

இருப்பினும், மீண்டும் தேசிய அணியில் இடம் பிடிக்கும் உறுதியுடன் அவர் தீவிரமாகப் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். தனது தற்போதைய நிலை குறித்துப் பேசிய பிரித்வி ஷா, சமூக வலைதளங்களில் இருந்து விலகித் தன்னையும் தனது ஆட்டத்தையும் மேம்படுத்துவதில் மட்டும் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

Prithvi shaw

இது குறித்து பேசிய அவர், ஓய்வு நேரத்தில் ஹோட்டல் அறையில் நெட்ஃபிளிக்ஸ் பார்ப்பது அல்லது 'ஃபீஃபா' (FIFA), 'ஜிடிஏ' (GTA), 'டெக்கன்' (Tekken) போன்ற பிஎஸ்5 (PS5) வீடியோ கேம்களை விளையாடுவதையே விரும்புவதாகவும் கூறியுள்ளார். புற விமர்சனங்களைக் காட்டிலும் குடும்பத்தின் கருத்தே தனக்கு முக்கியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

IND vs WI: இந்த வீரர் 20 சதம் அடித்திருக்கிறார் என உங்களுக்கு தெரியுமா? வசீம் ஜாபர் பாராட்டு

IND vs WI: இந்த வீரர் 20 சதம் அடித்திருக்கிறார் என உங்களுக்கு தெரியுமா? வசீம் ஜாபர் பாராட்டு

மும்பையில் பள்ளி மாணவர்களுக்கான ஹாரிஸ் ஷீல்ட் போட்டியில் 546 ரன்கள் குவித்து பிரித்வி ஷா முதன்முதலில் நாடு தழுவிய கவனத்தைப் பெற்றார். தொடர்ந்து, 2018-ஆம் ஆண்டு இந்திய 19 வயதுக்கு உட்பட்டோர் அணியின் கேப்டனாகச் செயல்பட்டு உலகக்கோப்பையை வென்று தந்தார். அதே ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினார்.

இருப்பினும், காயம், உடற்தகுதிச் சிக்கல்கள் மற்றும் பார்ம் அவுட் காரணமாக அவரது சர்வதேச கிரிக்கெட் பயணம் முடங்கியது. இதுவரை இந்தியாவுக்காக 5 டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டியில் விளையாடியுள்ள ஷா, கடைசியாக 2021 ஜூலையில் இலங்கைக்கு எதிராகச் சர்வதேச போட்டியில் பங்கேற்றார்.

2024-ஆம் ஆண்டில் மும்பை ரஞ்சி கோப்பை அணியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். அத்துடன் 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியால் விடுவிக்கப்பட்டு ஏலத்திலும் எடுக்கப்படவில்லை. இக்கட்டான அந்தச் சூழலில், முன்னாள் இந்தியப் பயிற்சியாளர் கிரெக் சேப்பல் அவருக்குக் கடிதம் எழுதி ஊக்கம் அளித்திருந்தார்.

பின்னடைவுகளுக்கு மத்தியிலும் பிரித்வி ஷா உள்நாட்டுப் போட்டிகளில் தனது திறமையை மீண்டும் நிரூபித்துள்ளார். 2025-26 ரஞ்சி கோப்பை தொடரில் 7 போட்டிகளில் விளையாடி, சண்டிகர் அணிக்கு எதிராக 156 பந்துகளில் 222 ரன்கள் விளாசியது உட்பட மொத்தம் 537 ரன்கள் குவித்தார். இதன் தொடர்ச்சியாக, 2026 ஐபிஎல் பருவத்துக்காக டெல்லி கேபிடல்ஸ் அணி அவரை மீண்டும் தனது அணியில் சேர்த்துக் கொண்டது.

IND vs WI: கம்பீரின் செல்லப்பிள்ளை பந்துவீச்சில் செய்த தவறு.. வெற்றி பெற உடனே சரி செய்யனும்- ஜாபர்

Also Read

IND vs WI: கம்பீரின் செல்லப்பிள்ளை பந்துவீச்சில் செய்த தவறு.. வெற்றி பெற உடனே சரி செய்யனும்- ஜாபர்

இந்திய அணியில் இடம்பெறுவது குறித்து பேசிய பிரித்வி ஷா, "அந்த இலக்கு இல்லையென்றால் நான் இன்றைக்கு விளையாடிக் கொண்டிருக்கவே மாட்டேன். இது யாருக்கும் எதையும் நிரூபிப்பதற்கான போராட்டம் அல்ல. இது எனக்குள்ளேயே நடக்கும் சவால். கடினமாக உழைத்து, எனது ஆட்டத்தின் மூலமே பதில் சொல்ல விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, October 15, 2026, 23:35 [IST]
Other articles published on Oct 15, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+