தெரியாம பண்ணிட்டேன்.. யாரும் இப்படி பண்ணாதீங்க..!! உருக்கமாக பதிவை வெளியிட்ட இளம் வீரர்..!!
Recommended Video
மும்பை: விளையாட வேண்டும் என்ற ஆர்வத்தில், மருத்துவரின் ஆலோசனையை பெறாமல் நானே ஒரு இருமல் மருந்தை உட்கொண்டு விட்டேன் என்று தடை செய்யப்பட்ட இளம் வீரர் பிரித்வி ஷா உருக்கமாக கூறி இருக்கிறார்.
சையத் முஷ்டாக் ட்ராபி கடந்த பிப்ரவரி 22ல் நடைபெற்றது. அப்போது பிரித்வி ஷாவிடம் நடத்தப்பட்ட ஊக்கமருந்து பரிசோதனையில் அவர் பிசிசிஐ தடை விதித்துள்ள ஊக்க மருந்தை உட்கொண்டதாக தெரிய வந்துள்ளது. இதனால் பிசிசிஐ அவருக்கு 8 மாதம் எந்த வகையான கிரிக்கெட்டையும் விளையாடுவதற்கு தடை விதித்துள்ளது.
அவருடன் சேர்த்து மேலும் 2 வீரர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை மார்ச் 16 முதல் நவம்பர் 15 வரை விதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட மருந்து கொண்ட இருமல் மருந்தினை உட்கொண்டதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

ஐபிஎல் தொடர்
19 வயதான பிரித்வி ஷா இதுவரை டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு சதம் உட்பட 237 ரன்கள் எடுத்துள்ளார். இந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடியவர்.
டுவிட்டர் பதிவு
இதுபற்றி, தனது ட்விட்டர் பக்கத்தில் பிரித்வி ஷா வருத்தம் தெரிவித்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது: இப்போது தான் எனக்கு பிசிசிஐ என்னை நீக்கியது தெரியவந்தது. எனக்கு மிகுந்த இருமலும் சளியும் இருந்ததால் நான் விளையாடும் ஆர்வத்தில், மருத்துவரிடம் ஆலோசனை பெறாமல் நானே ஒரு இருமல் மருந்தை உட்கொண்டு விட்டேன்.

யாரும் செய்யாதீர்கள்
என் விதியை தான் நான் நொந்துகொள்ள வேண்டும். நான் செய்த காரியத்தை இனி யாரும் செய்யாதீர்கள். பிசிசிஐயின் விதிகளை பின்பற்றுங்கள். என்னை ஊக்கப்படுத்திய அனைவருக்கும் என் நன்றி.

மீண்டு வருவேன்
தடையானது எனக்கு பேரிடிதான். ஆனாலும் என் மீது தவறு இருக்கிறது. எனவே நிச்சயமாக இதனை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு மீண்டு வருவேன் என்று உருக்கமாகப் பதிவு செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications