பிருத்வி ஷா, ஷூப்மன் கில்லுக்கு பிரமோஷன்... இந்திய ஏ அணிக்காக தேர்வு!
Recommended Video

பெங்களூரு: இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை ஸ்கூல் டீமுக்காக விளையாடி வந்த பிருத்வி ஷா, ஷூப்மன் கில், இரண்டாண்டுகளுக்குள் மிகப் பெரிய முன்னேற்றம் அடைந்து, இந்திய ஏ அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய ஏ அணி, அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இங்கிலாந்து லயன்ஸ் எனப்படும் அந்த நாட்டின் ஏ அணி, வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி மற்றும் இந்திய ஏ அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு தொடர் ஜூன் மாதம் நடக்கிறது. அதைத் தொடர்ந்து, நான்கு நாட்கள் போட்டிகள் மூன்று நடக்கின்றன. அதில் இரண்டு வெஸ்ட் இண்டீஸ் அணியுடனும், ஒன்று இங்கிலாந்து அணியுடனும் நடக்க உள்ளது.

இந்த சுற்றுப் பயணத்துக்கான இந்திய ஏ அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்று வந்த இந்திய அணியில் இடம்பெற்ற, ஐபிஎல் போட்டிகளின் புதிய ஹீரோக்களான பிருத்வி ஷா, ஷூப்மன் கில் இடம்பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டு நடந்த, 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கோப்பையை வென்றுவந்த இந்திய அணியில் இடம்பெற்றிருந்த சில வீரர்கள், ஐபிஎல் போட்டியில் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். அதில், ரூ.1.20 கோடிக்கு டெல்லி அணியால் ஏலம் எடுக்கப்பட்ட பிருத்வி ஷா மற்றும் ரூ.1.8 கோடிக்கு கொல்கத்தா அணியால் ஏலம் எடுக்கப்பட்ட ஷூப்மன் கில் இந்த ஐபிஎல் சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இங்கிலாந்துக்கு செல்லும் இந்திய ஏ அணிக்காக அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஸ்கூல் டீமுக்காக விளையாடி வந்த இருவரும், ரஞ்சிக் கோப்பை, 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி, ஐபிஎல், தற்போது இந்திய ஏ அணி என தங்களுடைய ஆட்டத்தைப் போலவே, வேகமாக முன்னேறி வருகின்றனர்.
முத்தரப்பு போட்டிக்கான இந்திய ஏ அணி:
ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), பிருத்வி ஷா,. மயாங்க் அகர்வால், ஷுப்மன் கில், ஹனுமா விகாரி, சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா, ரிஷப் பந்த், விஜய் சங்கர், கே. கவுதம், அக்சார் படேல், குருணால் பாண்டயா, பிரசித் கிருஷ்ணா, தீபக் சாகர், கலீல் அகமது, ஷர்துல் தாகுர்.
நான்கு நாட்கள் போட்டிக்கான இந்திய அணி:
கருண் நாயர் (கேப்டன்), ஆர் சமர்த், மயாங்க் அகர்வால், ஈஸ்வரன், பிருத்வி ஷா, ஹனுமா விகாரி, அங்கித் பாவ்னே, விஜய் சங்கர், கேஎஸ் பரத், ஜயந்த் யாதவ், ஷபாஸ் நதீம், அங்கித் ராஜ்புர், முகமது சிராஜ், நவ்தீப் சைனி, ரஜ்னீஸ் குர்பானி.


Click it and Unblock the Notifications