For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தாய் இறந்த இரண்டே நாட்களில் தேசத்திற்கான பணி.. இந்திய வீராங்கனையின் மனவலிமை.. குவியும் பாராட்டு!

மும்பை: தாயை இழந்த இரண்டே நாட்களில் நாட்டிற்காக விளையாட களமிறங்கிவிட்டார் இந்திய கிரிக்கெட் வீராங்கனை பிரியா புனியா.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பறித்து வருகிறது. குடும்பத்தில் ஒருவருக்கு வந்துவிட்டால் அனைவருக்கும் எளிதாக பரவக்கூடிய அபாயம் நிலவி வருகிறது.

பொதுமக்கள் மட்டுமின்றி கிரிக்கெட் பிரபலங்கள் பலரது இல்லங்களிலும் கொரோனா வைரஸ் பெரும் துயரங்களை ஏற்படுத்தி வருகிறது.

தாய் உயிரிழப்பு

தாய் உயிரிழப்பு

அந்தவகையில் தான் கிரிக்கெட் வீராங்கனை பிரியா புனியாவும் தனது தாயை இழந்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 18ம் தேதி உயிரிழந்தார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட பிரியா, நீங்கள் என்னை எப்போதும் ஏன் தைரியத்துடன் இருக்கச் சொன்னீர்கள் என நான் இன்று உணர்ந்தேன். உங்களுடைய இழப்பைச் சுமக்க ஒரு நாள் எனக்கு வலிமை தேவை என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். நான் உங்களை இழக்கிறேன் அம்மா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருப்பீர்கள் என உருக்கமாக கூறியிருந்தார்.

 கேள்வி

கேள்வி

இங்கிலாந்து செல்லும் இந்திய மகளிர் அணியில் ப்ரியாவும் இடம் பெற்றுள்ளார். இதற்கான பணிகளில் அவர் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதுதான், அவரின் தாயார் இறப்பு செய்தி அவருக்கு தெரியவந்தது. இதனால் அவருக்கு பலரும் ஆறுதல் தெரிவித்து வந்தனர். மேலும் இங்கிலாந்து தொடரில் அவரால் பங்கேற்க முடியுமா என்ற கேள்வியும் நிலவி வந்தது.

 தன்னம்பிக்கை நாயகி

தன்னம்பிக்கை நாயகி

இந்நிலையில், தாய் இறந்த இரண்டே நாட்களில் நாட்டிற்காக விளையாட கிளம்பிவிட்டார் தன்னம்பிக்கை நாயகி பிரியா புனியா. இந்திய மகளிர் அணி, ஜூன் 16ம் தேதி முதல் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடவுள்ளது. இதற்காக நேற்று மும்பையில் ஏற்படுத்தப்பட்ட பயோ பபுளில் பிரியா புனியா இணைந்தார். அவரின் மன வலிமையை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

இங்கிலாந்து சுற்றுப்பயணம்

இங்கிலாந்து சுற்றுப்பயணம்

மும்பையில் 14 நாட்கள் குவாரண்டைனில் இருந்த பிறகு இந்திய மகளிர் அணி வரும் ஜூன் 2ம் தேதி ஆண்கள் அணியுடன் சேர்ந்து இங்கிலாந்து பயணிக்கிறது. அங்கு இங்கிலாந்து அணிக்கு எதிராக வரும் ஜூன் 16ம் தேதி டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. மேலும் அதன்பிறகு ஜுன் 27 முதல் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஜூலை 9ம் தேதி முதல் 3 டி20 போட்டிகளிலும் பங்கேற்கிறது.

Story first published: Thursday, May 20, 2021, 17:21 [IST]
Other articles published on May 20, 2021
English summary
Priya Punia joins Indian team’s bio-bubble in Mumbai days after mother’s death
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+