சிக்ஸ் அடிக்க முடியாது ஆனா 250+ ஸ்ட்ரைக் ரேட்.. மரண அடி அடித்த பிரியன்ஷ்
கொல்கத்தா: 2025 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் துவக்க வீரர் பிரியன்ஷ் ஆர்யா அதிரடி துவக்கம் அளித்தார். இது அவரது வழக்கமாக ஆடும் ஆட்டம் தான். ஆனால் பவர் பிளேவில் சிக்ஸர் அடிக்காமலேயே, 250 என்ற வேகத்தில் ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் குவித்தார்.
முதல் ஐந்து ஓவர்கள் வரை அவர் வேகப்பந்து வீச்சாளர்கள் பந்துவீச்சில் பவுண்டரிகள் அடித்துத் தள்ளினார். சுழற்பந்து வீச்சாளர்கள் வரும் வரை 6 பவுண்டரிகள் அடித்த அவர், 12 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்திருந்தார்.

வருண் சக்கரவர்த்தி மற்றும் சுனில் நரைன் பந்து வீசத் துவங்கிய பின், சற்று நிதானித்து ஆடிய அவர் அதன் பின் சிக்ஸருக்கு மாறினார்.
27 பந்துகளில் அரைசதம் கடந்த அவர் அதன் பின்னரும் அதிரடியைத் தொடர்ந்தார். மேலும் தனது ஸ்ட்ரைக் ரேட் 200 க்கும் மேல் இருக்குமாறு பார்த்துக் கொண்டார். அவருடன் பிரப் சிம்ரன் சிங் அதிரடியாக ரன் குவித்தார்.
இவர்களின் ஆட்டத்தால் இந்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணி முதல்முறையாக பவர் பிளே ஓவர்களில் விக்கெட் இழக்காமல் ஆடியது. மேலும் துவக்க ஜோடி 100 ரன்களை கடந்தது. பின்னர் பிரியன்ஷ் ஆர்யா 35 பந்துகளில் 69 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
செய்தி சுருக்கம்:
* கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2025 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் துவக்க வீரர் பிரியன்ஷ் ஆர்யா அதிரடியாக விளையாடினார்.
* அவர் சிக்ஸர் அடிக்காமலேயே, துவக்கத்தில் 250 என்ற வேகத்தில் (ஸ்ட்ரைக் ரேட்டில்) ரன் குவித்தார்.
* வேகப்பந்து வீச்சுக்கு எதிராக பவுண்டரிகள் அடிப்பதில் கவனம் செலுத்தினார்.
* சுழற்பந்து வீச்சுக்கு எதிராக சிக்ஸர்கள் அடிக்கத் துவங்கினார்.
* 27 பந்துகளில் அரைசதம் கடந்த அவர், 35 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
* பிரியன்ஷ் ஆர்யாவின் ஆட்டத்தால், பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த ஆண்டு முதல்முறையாக பவர் பிளே ஓவர்களில் விக்கெட் இழக்காமல் ஆடியது.
* துவக்க ஜோடி 100 ரன்களையும் கடந்தது.


Click it and Unblock the Notifications