Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புரோ கபடி.. இறுதிப்போட்டியில் ஹரியானா - பாட்னா மோதல்.. என்ன நேரம், எந்த ஓடிடியில் பார்க்கலாம்?

புனே: புரோ கபடி லீக் தொடரின் 11வது சீசனுக்கான இறுதிப்போட்டியில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை எதிர்த்து பாட்னா பைரேட்ஸ் அணி மோதவுள்ளது. இந்த போட்டி தொடங்கவுள்ள நேரம், எந்த தொலைக்காட்சி மற்றும் ஓடிடியில் நேரலை ஒளிபரப்பு என்பது தொடர்பான அனைத்து விவரங்களையும் பார்க்கலாம்.

புரோ கபடி லீக் தொடருக்கான 11வது சீசனுக்கான இறுதிப்போட்டியில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை எதிர்த்து பாட்னா பைரேட்ஸ் அணி விளையாடவுள்ளது. அரையிறுதி போட்டியில் யுபி யோதாஸ் அணியை 28-25 என்ற புள்ளிகள் கணக்கில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி அபார வெற்றியை பெற்றது. அதேபோல் மற்றொரு அரையிறுதியில் டபாங் டெல்லி அணியை 32-28 என்ற கணக்கில் வீழ்த்தி பாட்னா அணியும் அசத்தியது.

pro kabaddi pro kabbadi 2024 2024

இந்த வெற்றியின் மூலமாக பாட்னா பைரேட்ஸ் அணி 5வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது. இதுவரை 4 இறுதிப்போட்டியில் விளையாடியுள்ள பாட்னா பைரேட்ஸ் அணி 3 முறை சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது. அதேபோல் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 2வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறது.

கடந்த சீசனிலும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு வந்தாலும், புனேரி பல்தான்ஸ் அணியிடம் தோல்வியை சந்தித்தது. இதனால் இறுதிப்போட்டி பரபரப்பாக இருக்கும் என்பது நிச்சயமாகியுள்ளது. இந்த இரு அணிகளும் இதுவரை 13 முறை நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், 7 போட்டிகளில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி வென்றுள்ளது.

அதேபோல் பாட்னா பைரேட்ஸ் அணி 5 முறை வென்றுள்ள நிலையில், ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது. ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை பொறுத்தவரை நட்சத்திர வீரர்களான வினய் மற்றும் ராகுல் சேத்பால் இருவரின் கைகளில் தான் அந்த அணியின் வெற்றி உள்ளது. ஏனென்றால் இந்த சீசனில் மட்டும் 23 போட்டிகளில் வினய் 158 ரெய்டு புள்ளிகளையும், ராகுல் சேத்பால் 70 டேக்குள் புள்ளிகளையும் குவித்துள்ளனர்.

அதேபோல் முகமதுரேசாவின் ஆல்ரவுண்டிங் ஆட்டமும் முக்கிய பங்கு வகிக்கும். பாட்னா பைரேட்ஸ் அணியை பொறுத்தவரை தேவாங்க் 24 போட்டிகளில் விளையாடி 296 ரெய்டு புள்ளிகளையும், டிஃபெண்டரான தீபக் சிங் 24 போட்டிகளில் 62 புள்ளிகளையும் கைப்பற்றியுள்ளனர். அதேபோல் ஆல்ரவுண்டராக அன்கிட் 77 புள்ளிகளை பெற்றிருக்கிறார்.

இரு அணிகளும் சம பலத்துடன் இருப்பதால், எந்த அணி வெற்றி பெறும் என்று கணிக்க முடியாமல் விமர்சகர்களே திண்டாடி வருகின்றனர். இந்த புரோ கபடி லீக் தொடர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு நேரலை ஒளிபரப்பாகிறது. அதேபோல் ஓடிடி-யை பொறுத்தவரை டிஸ்னி+ஹாட்ஸ்டார் செயலியில் அதே நேரத்தில் பார்க்க முடியும்.

Story first published: Sunday, December 29, 2024, 8:33 [IST]
Other articles published on Dec 29, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+