Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புரோ கபடி லீக் 2023 புள்ளிப்பட்டியல் - சோகத்தில் தமிழ் தலைவாஸ்.. நம்பர் 1 இடம் எல்லாம் கனவு தான்

சென்னை : 2023 புரோ கபடி லீக் தொடரின் புள்ளிப் பட்டியலில் தமிழ் தலைவாஸ் அணி பாதாளத்தில் இருக்கிறது.

மொத்தம் 12 அணிகள் பங்கேற்றுள்ள இந்த கபடி தொடரில் 11வது இடத்தில் தான் இருக்கிறது தமிழ் தலைவாஸ். தமிழ் தலைவாஸ் எப்போதுமே அணித் தேர்வில் சொதப்புகிறது என்ற குற்றச்சாட்டும் உண்டு.

2023 சீசனில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியுடன் தான் தன் பயணத்தை துவக்கியது. இதுவரை நான்கு போட்டிகளில் ஆடி இரண்டு வெற்றிகள், இரண்டு தோல்விகளை பெற்றுள்ளது. 10 புள்ளிகள் மட்டுமே பெற்று புள்ளிப் பட்டியலில் 11வது இடத்தில் உள்ளது. புள்ளி வித்தியாசம் -10 ஆக உள்ளதும் அந்த அணிக்கு பின்னடைவாக உள்ளது.

Pro Kabaddi League 2023 Points Table : Tamil Thalaivas stands at 11th position

மற்ற அணிகள் எல்லாம் 5 முதல் 7 போட்டிகள் வரை ஆடி இருப்பதால் தமிழ் தலைவாஸ் அடுத்த இரண்டு போட்டிகளில் வென்றால் புள்ளிப் பட்டியலில் மற்ற அணிகளை முந்தி மூன்றாவது இடம் பிடிக்கக் கூட வாய்ப்பு உள்ளது. ஆனால், ரசிகர்களுக்கே அந்த அணியின் மீது நம்பிக்கை இல்லை.

எனினும், தற்போது சென்னையில் அடுத்த கட்ட புரோ கபடி லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. அதிலாவது தமிழ் தலைவாஸ் வெற்றிப் பாதைக்கு திரும்புமா என பார்க்கலாம். தமிழ் தலைவாஸ் அணியை விடவும் கீழே இருக்கும் அணி தெலுங்கு டைட்டன்ஸ் பவன் செஹ்ராவத் போன்ற நட்சத்திர ரைடர் இருந்தும் அந்த அணி கடைசி இடத்தில் உள்ளது.

தற்போது புள்ளிப் பட்டியலில் புனேரி பல்தான்ஸ் அணி முதல் இடத்தில் உள்ளது அந்த அணி 6 போட்டிகளில் ஆடி 5 வெற்றிகளை பெற்று 26 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி பெற்றுள்ள புள்ளி வித்தியாசம் 72 என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் இடத்தில் பெங்கால் வாரியர்ஸ் 21 புள்ளிகளுடனும், மூன்றாவது இடத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 20 புள்ளிகளுடனும் இடம் பெற்று உள்ளன.

Story first published: Friday, December 22, 2023, 20:09 [IST]
Other articles published on Dec 22, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+