For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

புரோ கபடி லீக் - கேப் விட்டு அடிங்கப்பா.. கதறிய பெங்களுரு புல்ஸ்.. தாண்டவம் ஆடிய புனேரி

புனே : புரோ கபடி லீக் தொடரின் 33 வது போட்டியில் புனேரி பல்தான் அணி, பெங்களுரு புல்ஸ் அணியை 25 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் புனேரி அணியின் மோஹித் கயாத் ரைடராக சிறப்பாக செயல்பட்டு 7 புள்ளிகளை பெற்றார். அதே அணியின் முஹம்மத்ரேசா தடுப்பாட்டத்தில் சிறப்பாக ஆடி 6 புள்ளிகளை பெற்று அசத்தினார். இவர்கள இருவரின் ஆட்டமே அந்த அணியின் பெரிய வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

Pro Kabaddi League 2023 : Puneri Paltan beat Bengaluru Bulls in 33rd match

இந்தப் போட்டியில் முதல் பாதியிலேயே புனேரி பல்தான் அணி 20 புள்ளிகள் முன்னிலையில் இருந்தது. முதல் பாதிக்குள் பெங்களுரு புல்ஸ் அணி இரண்டு முறை ஆல் - அவுட் ஆகி இருந்தது. இந்த நிலையில், இரண்டாம் பாதி துவங்கிய உடன் பெங்களுரு அணியை மூன்றாவது முறையாக ஆல் -அவுட் செய்த கதற விட்டது புனேரி அணி. குறிப்பாக முஹம்மத்ரேசாவை தாண்டி அந்த புனேரி அணியிடம் புள்ளிகளை பெற முடியாமல் சிக்கித் தவித்ததனர் பெங்களுரு வீரர்கள்.

ஆட்ட நேர முடிவில் புனேரி பல்தான்ஸ் 43 புள்ளிகளும், பெங்களுரு புல்ஸ் அணி 18 புள்ளிகளும் மட்டுமே பெற்றன. புனேரி அணி 25 புள்ளிகள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்தது.

Story first published: Thursday, December 21, 2023, 23:47 [IST]
Other articles published on Dec 21, 2023
English summary
Pro Kabaddi League 2023 : Puneri Paltan beat Bengaluru Bulls in 33rd match
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+