Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

PKL : வேணாம் மணிந்தர்.. தமிழ் தலைவாஸை கதிகலங்க வைத்த பெங்கால் வீரர்.. போட்டியில் நடந்த ட்விஸ்ட்

பெங்களூர் : 2023 புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணி துவக்கத்திலும் இரண்டாம் பாதியிலும் சிறப்பாக ஆடி தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது. குறிப்பாக பெங்கால் வாரியர்ஸ் அணியின் ரெய்டர் மணிந்தர் சிறப்பாக ஆடி புள்ளிகளை அள்ளி இரண்டாம் பாதியில் போட்டியை மாற்றினார்.

Pro Kabaddi League 2023 : Tamil Thalaivas beaten by Bengal Warriors Maninder Singh

போட்டி ஆரம்பித்த ஏழாவது நிமிடத்திலேயே தமிழ் தலைவாஸ் அணி ஆல் - அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தது. அடுத்த பத்து நிமிடங்களில் அதற்கு பதிலடி கொடுத்து பெங்கால் வாரியர்ஸ் அணியை ஆல் - அவுட் செய்தது. மீண்டும் ஏழு நிமிடங்களில் இரண்டாவது முறையாக பெங்கால் அணியை ஆல் - அவுட் செய்து போட்டியின் பாதி நேரத்தில் முன்னிலையில் இருந்தது தமிழ் தலைவாஸ். பாதி நேரத்தின் போது பெங்கால் 21, தமிழ் தலைவாஸ் 27 புள்ளிகளுடன் இருந்தன.

அடுத்து பெங்கால் அணியின் ரெய்டர் மணிந்தர் தொடர்ந்து ஒவ்வொரு ரெய்டிலும் புள்ளிகளை எடுத்தார். இரண்டாம் பாதியில் மட்டுமே தமிழ் தலைவாஸ் அணி இரண்டு முறை ஆல் - அவுட் ஆனது. மேலும், பெங்கால் ரெய்டர்களை தடுப்பதிலும் மோசமாக செயல்பட்டது தமிழ் தலைவாஸ். மேலும், தமிழ் தலைவாஸ் அணியின் முக்கிய ரெய்டர் நரேந்தர் சென்ற 18 ரெய்டில் 7-இல் மட்டுமே புள்ளிகளை பெற்றார்.

இப்படி சொதப்பல் ஆட்டம் ஆடிய தமிழ் தலைவாஸ் ஆட்ட நேர முடிவில் 38 புள்ளிகள் மட்டுமே பெற்று இருந்தது. பெங்கால் வாரியர்ஸ் அணி 48 புள்ளிகள் பெற்று அபார வெற்றி பெற்றது.

Story first published: Sunday, December 10, 2023, 22:20 [IST]
Other articles published on Dec 10, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+