Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புரோ கபடி லீக் 2023 - தமிழரை வைத்தே தமிழ் தலைவாஸ் சோலியை முடித்த பாட்னா பைரேட்ஸ்

சென்னை : 2023 புரோ கபடி லீக்கில் சென்னையில் நடந்த தமிழ் தலைவாஸ் - பாட்னா பைரேட்ஸ் போட்டியில் தமிழக வீரர் சுதாகரை வைத்து தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது பாட்னா.

இந்த ஆண்டு புரோ கபடி லீக்கில் தமிழ் தலைவாஸ் அணி இதுவரை 4 போட்டிகளில் ஆடி இரண்டு வெற்றிகள், இரண்டு தோல்விகளை பெற்று இருந்தது. அடுத்து சென்னையில் போட்டிகள் நடைபெறுவதால் ரசிகர்கள் ஆதரவுடன் அந்த அணி வெற்றிப் பாதைக்கு திரும்புமா? என்ற கேள்வியுடன் பாட்னா பைரேட்ஸ் உடன் மோதியது.

Pro Kabaddi League 2023 : Tamil Thalaivas beaten by Patna Pirates with the help of Sudhakar

மறுபுறம், பாட்னா பைரேட்ஸ் அணி தொடர்ந்து மூன்று தோல்விகளை சந்தித்து அதில் இருந்து மீள வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. போட்டி துவங்கிய சில நிமிடங்களில் பாட்னா அணி 9 - 3 என முன்னிலை பெற்றது. ஆனால், தமிழ் தலைவாஸ் அணி எதிர்பாராத வகையில் திருப்பி அடித்தது.

ஒரு கட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணியை ஆல் - அவுட் செய்தது. 18 - 14 என முன்னிலை பெற்றது தமிழ் தலைவாஸ். ஆனால், அப்போது பாட்னா அணியின் சுதாகர் செய்த ரைடுகளில் அனல் பறந்தது. தொடர்ந்து அவர் புள்ளிகளை பெற்றார். முதல் பாதியின் முடிவில் பாட்னா பைரேட்ஸ் அணி 21 - 20 என முன்னிலை பெற்றது.

இரண்டாம் பாதியில் தமிழ் தலைவாஸ் அணி படு மோசமாக செயல்பட்டு 23 மற்றும் 31வது நிமிடங்களில் இரண்டு முறை ஆல் - அவுட் ஆனது. ஆட்ட நேர முடிவில் 46 - 33 என்ற புள்ளிக் கணக்கில் பாட்னா அணி அபார வெற்றியை பதிவு செய்தது. சுதாகர் 11 புள்ளிகள் பெற்று தன் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.

தமிழ் தலைவாஸ் அணி தான் ஆடிய ஐந்து போட்டிகளில் 2 வெற்றி, மூன்று தோல்விகளை பெற்று புள்ளிப் பட்டியலில் 11வது இடத்தில் நீடிக்கிறது. பாட்னா அணி ஆறு போட்டிகளில் ஆடி மூன்று வெற்றி, மூன்று தோல்விகளுடன் 17 புள்ளிகள் பெற்று ஆறாவது இடத்தில் உள்ளது.

Story first published: Saturday, December 23, 2023, 11:45 [IST]
Other articles published on Dec 23, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+