For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

புரோ கபடி புள்ளிப்பட்டியல் - பிளே-ஆஃப் தண்டனையை அனுபவிக்கும் தமிழ் தலைவாஸ்.. இதான் நீங்க பண்ண தப்பு

சென்னை : பத்தாவது சீசன் புரோ கபடி லீக் சுற்றின் புள்ளிப் பட்டியலில் தமிழ் தலைவாஸ் அணி 9ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. அந்த அணியின் பிளே - ஆஃப் கனவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. அந்த அணிக்கு இன்னும் ஐந்து லீக் போட்டிகளே மீதமுள்ள நிலையில், அந்த ஐந்து போட்டிகளிலும் வென்றால் கூட பிளே-ஆஃப் வாய்ப்பு உறுதியாக கிடைக்குமா? என சொல்ல முடியாத நிலையே உள்ளது.

இந்த தொடரின் பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்ல வேண்டும் என்றால் புள்ளிப் பட்டியலில் முதல் ஆறு இடங்களில் தமிழ் தலைவாஸ் அணி இடம் பெற வேண்டும். தற்போது புள்ளிப் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் இருக்கும் அணிகளை விட்டு விட்டு, ஆறாவது இடத்தை தமிழ் தலைவாஸ் பிடிக்க வேண்டும் என்றால் எத்தனை அணிகளுடன் போட்டி போட வேண்டும் என்று பார்ப்போம்.

ஒன்பதாவது இடத்தில் இருக்கும் தமிழ் தலைவாஸ் அணிக்கு நான்கு அணிகளால் பிளே-ஆஃப் வாய்ப்பு பறிபோக வாய்ப்பு உள்ளது. ஆறாவது இடத்தில் இருக்கும் குஜராத் ஜெயன்ட்ஸ், அதைத் தொடர்ந்து இருக்கும் பெங்கால் வாரியர்ஸ், பெங்களுரு புல்ஸ் மற்றும் பத்தாவது இடத்தில் இருக்கும் யு மும்பா என நான்கு அணிகளோடு, தமிழ் தலைவாஸ் அணியும் புள்ளிப் பட்டியலில் முதல் ஆறு இடங்களில் இடம் பெற போட்டி போட்டு வருகிறது.

Pro Kabaddi League 2024 Points Table : Tamil Thalaivas under trouble to reach play - offs

இந்த ஐந்து அணிகளும் 40 முதல் 50 புள்ளிகள் வரை பெற்றுள்ளன. அனைத்து அணிகளுக்குமே இன்னும் ஐந்து அல்லது ஆறு லீக் போட்டிகள் மீதமுள்ளன. அதனால், இந்த ஐந்து அணிகளுமே 65 புள்ளிகளுக்கும் மேல் கூட பெறக் கூடிய சூழ்நிலையில் இருப்பதால் யார் பிளே-ஆஃப் செல்வார்கள் என தெளிவாக சொல்ல முடியாத சூழலே நிலவி வருகிறது.

தமிழ் தலைவாஸ் அணி தன் முதல் 12 போட்டிகளில் 10 தோல்விகளை பெற்றதால் தான் பிளே-ஆஃப் செல்வோமா இல்லையா? என்றே தெரியாத நிலைக்கு சென்றுள்ளது. தற்போது உள்ள அணிகளிலேயே இன்னும் ஒரு போட்டியில் தோற்றால் கூட பிளே-ஆஃப் வாய்ப்பை 99 சதவீதம் இழந்த அணியாக மாறி விடும் தமிழ் தலைவாஸ்.

மற்ற பெரிய அணிகள் தொடர்ந்து தோல்விகளை சந்தித்தால் மட்டுமே பிளே-ஆஃப் வாய்ப்பு கிடைக்கலாம் என்ற நிலையில் தான் இருக்கிறது தமிழ் தலைவாஸ். கடந்த ஐந்து போட்டிகளில் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள இந்த அணி, முதல் பாதி லீக் சுற்றில் பெற்ற தோல்விகளுக்கு தண்டனையாக பிளே-ஆஃப் வாய்ப்பு குறித்த குழப்பத்தில் இருக்கிறது.

புரோ கபடி லீக் புள்ளிப் பட்டியல் (101வது லீக் போட்டியின் முடிவில்) -

ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - 71 புள்ளிகள் - 1வது இடம்
புனேரி பல்தான் - 68 புள்ளிகள் - 2வது இடம்
டபாங் டெல்லி - 60 புள்ளிகள் - 3வது இடம்
ஹரியானா ஸ்டீலர்ஸ் - 55 புள்ளிகள் - 4வது இடம்
பாட்னா பைரேட்ஸ் - 53 புள்ளிகள் - 5வது இடம்
குஜராத் டைட்டன்ஸ் - 50 புள்ளிகள் - 6வது இடம்
பெங்கால் வாரியர்ஸ் - 44 புள்ளிகள் - 7வது இடம்
பெங்களுரு புல்ஸ் - 43 புள்ளிகள் - 8வது இடம்
தமிழ் தலைவாஸ் - 40 புள்ளிகள் - 9வது இடம்
யு மும்பா - 40 புள்ளிகள் - 10வது இடம்
யுபி யுத்தாஸ் - 23 புள்ளிகள் - 11வது இடம்
தெலுகு டைட்டன்ஸ் - 16 புள்ளிகள் - 12வது இடம்

Story first published: Friday, February 2, 2024, 23:57 [IST]
Other articles published on Feb 2, 2024
English summary
Pro Kabaddi League 2024 Points Table : Tamil Thalaivas under trouble to reach play - offs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+