
எப்படி
டெஸ்ட், ஒருநாள், டி 20 என்று மிக நீண்ட தொடர் இங்கிலாந்து - இந்தியா இடையே இந்தியாவில் நடக்க உள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் இந்தியா வெற்றிபெற்றால் டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு தேர்வாகும். இதனால் இந்த தொடரில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்று இந்திய அணி உறுதியாக உள்ளது.

இந்திய அணி
இந்த தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி விவரம் நேற்று வெளியாகி உள்ளது. அதன்படி விராட் கோலி, ரோஹித் சர்மா, சுப்மான் கில், மயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே, பண்ட், சாகா, பாண்டியா, கே. எல் ராகுல், பும்ரா, இஷாந்த் சர்மா, சிராஜ், ஷரத்துல் தாக்கூர், அஸ்வின், குல்தீப், வாஷிங்க்டன் சுந்தர், அக்சர் பட்டேல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சிக்கல்
இந்த நிலையில் இந்த முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ஆட போகும் பிளேயிங் லெவன் வீரர்கள் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆடும் இந்திய அணியில் கோலி, ரஹானே, புஜாரா,ரோஹித், பண்ட், பும்ரா, அஸ்வின் ஆகியோர் கண்டிப்பாக ஆடுவார்கள். மீதம் இருக்கும் நான்கு வீரர்கள் யார் என்று குழப்பம் ஏற்பட்டுள்ளது.

குழப்பம்
இதில் ஓப்பனிங்கில் கண்டிப்பாக ரோஹித் சர்மாவுடன் சுப்மான் கில் இடம்பெற வேண்டும். இதனால் அவர் அணியில் இருப்பார். மீதம் உள்ள மூன்று பேரில் இரண்டு ஸ்பீட் பவுலர்களை களமிறக்க வேண்டும். இது போக ஒரு ஸ்பின் ஆல் ரவுண்டர் களமிறக்கப்பட வேண்டும்.

ஜடேஜா இல்லை
அணியில் ஜடேஜா இல்லை என்பதால் யாரெல்லாம் களமிறக்கப்படுவார்கள் என்று கேள்வி எழுந்துள்ளது. இன்னொரு ஸ்பீட் பவுலராக சிராஜ் களமிறங்குவார். இதனால் மீதம் உள்ள ஷரத்துல் தாக்கூர், வாஷிங்க்டன் சுந்தர், பாண்டியா, ராகுல், அக்சர் பட்டேல், மயங்க் அகர்வால் ஆகியோரில் யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது.

இந்திய அணி
ஆடும் 11 பேர் கொண்ட வீரர்களை களமிறக்குவதில் இதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்திய அணியின் தேர்வுக்குழு இதனால் கடுமையான குழப்பம் அடைந்துள்ளது. யாரை களமிறக்குவது, யாரை புறக்கணிப்பது என்று தெரியாமல் தேர்வுக்குழு உறுப்பினர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

நிலவரம்
தற்போதைய நிலவரப்படி இந்திய அணியில் ரோஹித் சர்மா, சுப்மான் கில், கோலி, ரஹானே, புஜாரா, பண்ட், ஷரத்துல் தாக்கூர், அஸ்வின், வாஷிங்க்டன் சுந்தர், சிராஜ், பும்ரா ஆகியோர் ஆட வாய்ப்புள்ளது என்கிறார்கள். மீதம் இருக்கும் வீரர்கள் முக்கியமான வீரர்கள் என்றாலும் இவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது கஷ்டம் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications