Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல்-8: பெங்களூர் அணிக்கு பவுலிங்கில்தான் கண்டம்! கவலையில் டொனால்ட்!!

பெங்களூரு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு, பந்து வீச்சு பெரும் பிரச்சினைதான் என்று அந்த அணியின் பவுலிங் பயிற்சியாளர் ஆலன் டொனால்டு கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் உலக கோப்பை ஹீரோ மிட்சேல் ஸ்டார்க், நியூசிலாந்தின் மில்னே ஆகியோர் காயம் காரணமாக முதல் ரவுண்டு ஆட்டங்களில் ஆட முடியாததை குறிப்பிட்டு டொனால்டு இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பயிற்சி ஆரம்பம்

பயிற்சி ஆரம்பம்

ஐபிஎல் 8, தொடர், 8ம்தேதி தொடங்க உள்ள நிலையில், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் ஆலன் டொனால்டு தலைமையில், அந்த அணியினர் தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

உலக நாயகன்

உலக நாயகன்

ஆனால், உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த வேகப் பந்து வீச்சாளர் மிட்சேல் ஸ்டார்க் முட்டு வலியால் அவதிப்படும் நிலையில் முதல் இரு வாரங்களுக்கு அவர் விளையாட மாட்டார் என்று தெரிகிறது.

டொனால்டு கவலை

டொனால்டு கவலை

நியூசிலாந்தின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஆடம் மில்னே, குதிங்காலில் ஏற்பட்டுள்ள காயத்தால், அவதிப்பட்டு வருகிறார். இந்நிலையில், பெங்களூரு அணிக்கு இம்முறை பந்து வீச்சு பெரும் பிரச்சினையாக இருக்கும் என்கிறார் ஆலன் டொனால்டு.

நல்ல ஜோடி அமையனுமே..

நல்ல ஜோடி அமையனுமே..

நல்ல பந்து வீச்சு ஜோடிகளை பயன்படுத்துவது எனக்கு தலைவலி தருகிறது. ஸ்டார்க், மில்னே காயம் இதற்கு காரணம்.

ஆஸி. அப்பாட்

ஆஸி. அப்பாட்

சீன் அப்பாட் மற்றும் டேவிட் வைஸ் ஆகியோர் அணியின் வேகப்பந்து வீச்சுக்கு பலம் சேர்ப்பார்கள் என்று நம்புகிறேன். வருண் ஆரோன் நல்ல வேகத்தில் பந்து வீசுகிறார்.

நல்ல வேகம்

நல்ல வேகம்

முதல் முறையாக பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இப்போதுதான், தொடர்ச்சியாக 145 கிலோமீட்டர் வேகத்துக்கும் அதிகமாக பந்து வீசக்கூடிய வீரர்கள் கிடைத்துள்ளனர்.

ஆரோன் அசத்துவார்

ஆரோன் அசத்துவார்

வருண் ஆரோன், அதிக வேகத்தில் பந்து வீசுவதால்தான், அதிக ரன்களை விட்டுத்தருவதாக விமர்சனம் எழுகிறது. பிரெட் லீயும், ஜான்சனும் கூட அதிக ரன்களை விட்டுத் தருபவர்கள்தான். ஆனால், விக்கெட்டையும் வீழ்த்தக் கூடியவர்கள். பந்து எந்த அளவுக்கு வேகமாக வீசப்படுகிறதோ, அதற்கேற்ப ரன்களும் அடிக்கப்பட கூடும். ஆனால், விக்கெட் சரியும் என்பதை மறுக்க முடியாது. இவ்வாறு டொனால்ட் தெரிவித்தார்.

Story first published: Monday, April 6, 2015, 9:38 [IST]
Other articles published on Apr 6, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+